July 7, 2016

அமைதியான நாடுகள் வரிசையில் இலங்கை முன்னேற்றம்!

உலக அமைதி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தலில் இலங்கை அமைதியான நாடுகள் வரிசையில் முன்னேற்றமடைந்துள்ளது.


உலகில் 163 ஆபத்தான நாடுகள் வரிசையில் இலங்கை 97 வது இடத்தில் உள்ளது.

உலகில் ஆபத்தான நாடுகள் வரிசையில் சிரியா முதல் இடத்திலும் தென் சூடான் இரண்டாவது இடத்திலும் உள்ளன. அடுத்தாக ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

அமைதியான நாடுகள் வரிசையில் இந்தியா, இலங்கைக்கு பின் வரிசையில் உள்ளது. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் அமைதியற்ற மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பொருளாதாரம் மற்றும் அமைதி தொடர்பான சர்வதேச அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment