July 1, 2016

புத்திஜீவிகள் மௌனித்திருப்பதன் விளைவே சமூகத்தில் சித்திரவதைகளுடன் கூடிய குற்றங்களுக்கு காரணம்!

புத்திஜீவிகளும் சமூகத்தில் மதிக்கத்தக்கவர்களும் தங்களுடைய சமூகத்தை நோக்கியதான கடமைகளையும் பணிகளையும் செய்யாது மௌனித்திருப்பதன் விளைவே சமூகத்தில் சித்திரவதைகளுடன் கூடிய குற்றங்கள் இடம்பெறுவதற்கு காரணமாக உள்ளது. இவற்றை கட்டுபடுத்துவதற்கு சமாதானத்துடன் கூடிய அறிவூட்டல்


கல்வியானது மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும என முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி விக்னராஜா தெரிவித்துள்ளார்.

சர்வதேச சித்திரவதைகளுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு நேற்று யாழ் மனிதவுரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சித்திரவதைகள் எனும் போது எமது நாட்டில் இடம்பெற்ற போர்காலகட்டத்தில் மட்டுமின்றி அன்றாட வாழ்விலும் நடைபெறுகின்றது. அவை சட்ட ஒழுங்கை பேணுகின்ற அதிகாரிகளால் நடைபெறுவது அல்ல மாறாக சமூகத்தில் உள்ளவர்களாலேயே இடம்பெறுகின்றது.

மேலும் இது தொடர்பில் கால மாற்றதிற்குள் உள்ளாகியிருக்கும் இளைஞர், யுவதிகளை குறை கூறுவதில் எந்தவிதமான பயனும் வந்துவிடப்போவதில்லை.

அத்துடன் இலங்கையின் உயர்நீதிமன்ற நீதியரசராகவும் சர்வதேச நீதிபதியாகவும் இருந்த வீரமந்திரர் குறிப்பிட்டது போன்று மாணவர்களுக்கு சமாதானம் பற்றிய அறிவூட்டல்கள் பாடசாலை மட்டத்தில் இருந்தே புகுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது.

மேலும் மாணவன் உள்ளத்தில் சமாதானம் உருவாகி அது அவனில் இருந்து வெளியாகி அது அவனது சமூகத்தில் பரவி அச் சமூகமும் சமாதானம் மிக்க சமூகமாக மாற்றமடைய வேண்டும்.

அந்த வகையில் இச் செயற்பாடானது மாணவர்களது கல்வியில் அவர்களுடைய பாடத்துடன் அது எந்த பாடமாக இருந்தாலும் அந்த பாடக் கண்ணோட்டத்துடன் சமாதான கல்வியும் போதிக்கப்பட வேண்டும். மேலும் தற்போது ஆசிரியர்கள் சம்பந்தமாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

ஒர் சிறு சம்பவத்துக்காக முழு ஆசிரிய சமூகத்தையும் அவமதிப்பதற்கு சமூகமானது அனுமதிக்க கூடாது. மாட்டின் லூதர் கிங் கூறியதன்படி தீய செயல்களை செய்பவர்களை விடவும் புத்திஜீவிகள் மௌனித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அது சமூகத்திற்கு விரோதமான கேடான விளைவுகளை ஏற்படுத்தும்.

புத்திஜீவிகளும் சமூகத்தில் மதிக்கதக்கவர்களும் தங்களுடைய சமூகத்தை நோக்கியதான கடமைகளையும் பணிகளையும் செய்யாது மௌனித்திருப்பதன் விளைவே சமூகத்தில் சித்திரவதைகளுடன் கூடிய குற்றங்கள் இடம்பெறுவதற்கு காரணமாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment