யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட சந்தேகநபர் தற்போது அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட குரே தெரிவித்துள்ள நிலையினில் கைது வேட்டை தொடரப்போகின்றதாவென கேள்வி எழுந்துள்ளது.
கொழும்பினில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் ஆளுநர் ரெஜினோல்ட் கூறியுள்ளார். பிழைசெய்தவர்கள் நீதியின் முன்னால் நிறுத்தப்படவேண்டும். சந்தேகநபரை இன்னும் தீவிரமாகத் தேடி விரைவில் கைதுசெய்ய வேண்டுமெனவும் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார்.
நல்லிணகத்தை பல்கலைக்கழகத்தினில் உருவாக்க வேண்டுமென வலியுறுத்தப்படும் நிலையினில் இவ்வாறு கைதுகள் தொடரப்போவதாக விடுக்கப்படும் அறிவிப்பு நிச்சயமாக அதனை ஏற்படுத்தாதென அத்தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக தாக்குதலின் சூத்திரதாரிகளான சிங்கள மாணவர்கள் நால்வரிற்கு எதிராக தமிழ் மாணவர்கள் முறைப்பாடு செய்துள்ள நிலையினில் அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment