July 22, 2016

ஜேர்மனி வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு 09 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்!

ஜேர்மனியின் முனிச் பகுதி ஓலம்பியா வணிக வளாகத்தில் இன்று மாலை 6 மணியளவில் .மக்டோனால் துரித உணவாகத்துக்கு முன்னாள் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 09 பேர் பலியாகி, மேலும் பலர் படுகாயம் அடைந்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்திய மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மர்ம நபர் தொடர்பாக எந்தவித தகவலும் இன்னும் வெளிவரவில்லை. அதேப்போன்று, இந்த தாக்குதலுக்கு எந்தவித தீவிரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை..
இந்த நிலையில் இப் பகுதியால் சேவையில் உள்ள சகல பொது போக்கு வரத்து வாகனங்களும் வேறு வழித்தஜேர்மனியின் முனிச் பகுதி ஓலம்பியா வணிக வளாகத்தில் டத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த சம்பவம் நடை பெற்ற பகுதிக்கு அண்மையில் உள்ள பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்குமாறு காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment