July 20, 2016

விடுதலைப் புலிகளின் இலக்கத்தகட்டுடன் சயனைட் குப்பி மீட்பு!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறை பகுதியில் வெற்றுக் காணி ஒன்றிலிருந்து, த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு, சேதமடைந்த நிலையிலான அடையாள அட்டை, கைக்குண்டு, பழுதடைந்த நிலையிலான சயனைட் குப்பி என்பவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த பொருட்களை நேற்று (19) மாலை மீட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் கூறியுள்ளனர்.

மாவிலங்குதுறை கிராமத்திலுள்ள காளிகோவில் வீதியில் தங்கராசா தவேந்திரன் என்பவருக்கு சொந்தமான காணியில் சுற்று வேலி அமைப்பதற்காக குழி வெட்டிக் கொண்டிருந்த போது, மேற்கண்ட பொருட்கள் காணப்பட்டுள்ளன.

இதுதொடர்பில், பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த கைக்குண்டு, சயனைட் குப்பி மற்றும் த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு மற்றும் பழுதடைந்த நிலையிலான அடையாள அட்டை என்பவற்றை மீட்டதுடன், கைக்குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment