உடல்நோயைவிட மனநோய்தான் மனிதனை அதிகம் அழிக்கும் தன்மை வாய்ந்தது -சிசரோ
இலங்கையின் மனித வரலாற்றில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுபோரியல் அனர்த்தங்களின் விளைவாக உளத்தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகள் முரண்பாடுகள்
உறவுசச்சரவுகள் இடப்பெயர்வுகள் இழப்புக்கள் பிரிவு பேரழிவுகள் என்பவற்றின் உள்விளைவுகளையே போரியல் நெருக்கீடு எனலாம்.
குறிப்பாக வடக்கு கிழக்குப்பிரதேசத்தில் நடைபெற்ற கொடிய போரினால் மக்கள் அதிகமான உளநெருக்கீட்டிற்கு உள்ளாகியுள்ளனர். இவற்றில் சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகள், விசேடதேவைக்கு, உட்பட்டோர் வயோதிபர்கள், என்ற வயது பால் என்ற வேறுபாடின்றி மக்கள் பாரிய உள நெருக்கீட்டைச் சந்தித்துள்ளனர் என்பதை நமது கண்கள் ஊடாக காணமுடிகின்றது.
உடல் ரீதியான நோய்கள் ஏற்படுவதைப்போன்று உளரீதியானநோய்களும் எற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் போரியலினால் பலவிதமான பாரிய உளநோய்களை கொண்டுள்ளோர் உருவாகின்றார்கள் .
இவர்களை பல பெயர் குறித்து முத்திரை குத்தி சமூகத்திலிருந்து விலகிவிடுகின்றனர் அதேவேளை படித்தவர்கள்கூட உளநோயால் பாதிக்கப்பட்டவரை மூடிமறைத்துவைத்து அவர்களுக்காக மருத்துவம் பார்க்காத நிலையும் காணப்படுகின்றது.
இதனால் பல்வேறுபட்ட உளநோய்களை உருவாக்குவதற்கும் காரணமாக அமைகின்றது போர்நெருக்கீட்டுத்தாக்கங்களால்
துன்புறும் உள்ளத்தின் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் மீளமீள ஏற்படும் பல
எண்ணிக்கையான உடலியல் முறைப்பாடுகளைக் குறிக்கும் ஒன்றே மெய்பாட்டு
முறைப்பாட்டுநோய் எனலாம்.
தலைமுதல் கால்வரையுள்ள உறுப்புக்கள்பற்றிய அறிகுறிகளை வெளிப்படுத்தலாம் இந்நோயை மருத்துவ பரிசோதனை சாதாரணமாகவே காணப்படும் இவர்கள் உடலில் ஆங்காங்கே ஏற்படும் நோவுபோன்ற முறைப்பாடுகளைக் கொண்டிருப்பர்.
ஆனால் நோயைக்கண்டுபிடிக்க கடினமாக இருக்கும் உடல்முழுவதும் நோவு நெஞ்சிறுக்கம் தொடர்ச்சியான களைப்பு தலையிடி போன்றவைகள் கூட இருக்கலாம் இவர்களுக்கு சில வேளைகளில் மிதமான உளநோய்யும் கூட இருக்கலாம் இவற்றை மெய்பாட்டு முறைப்பாட்டுநோய் எனலாம்.
பொதுவான மனித அனுபவத்திற்கு அப்பாற்பட்ட ஓர் உளரீதியான நெருக்கீட்டைத் தொடர்ந்து ஏற்படும்நோயாகும். அதாவது கொடூர ஆபத்தான சம்பவங்கள் போன்றவற்றினாலும் மனவடுநோய்கள் பயங்கர அனுபவங்களின் விளைவுகள்ஆகும்.
மனிதனால் விளைவிக்கப்பட்ட போர்ச்சூழலால் ,சித்திரவதை தடுப்புக்காவல், பாலியல் பலாத்காரம் ,கண்ணிவெடி போன்றவையினால் ஏற்படுகின்றன
இயற்கையினால் சுனாமி, புயல்காற்று, சூறாவளி , வெள்ளப்பெருக்கு, போன்றவைகளால் உளம் மிக வெகுவாக பாதிப்படையலாம் . இதனால் ஏற்படும் அறிகுறிகளாக குறித்த கொடூரமான நிகழ்வு அல்லது சம்பவம் பற்றிய சிந்தனைகள் மீள மீள மனதில் எழுதல் அச்சம்பவம் பற்றிய கனவுகள் திரும்பத்திரும்ப ஏற்படுதல் மிதம் அஞ்சிய யாக்கிரதை ,நித்திரைக்குழப்பம், மனதை ஒருநிலைப்படுத்தமுடியாதநிலை, ஞாபகமறதி, சிலவேளைகளில் குற்ற உணர்வாக செய்திருக்கக்கூடிய ஒன்றை செய்யாமல்விட்டுவிட்டேன், என்ற உணர்வு ஏற்படலாம்.
போர் நடக்கும் சூழ்நிலையில் சித்திரவதைக்குட்பட்ட ஒருவரிடத்தில் பல அறிகுறிகளும் முறைப்பாடுகளும் தோன்றலாம் மீள மீள இது முக்கியமான பயத்தை அடிப்படையாகக்கொண்ட எதிர்தாக்கமாகும். குறிப்பாக வருங்காலத்தைப்பற்றி அளவுக்குமீறிய பயவுணர்வை உடையதாகயிருக்கலாம் பொதுவாக பதகளிப்புடையவர்கள் சாதாரண மனிதர்களாகத் தோன்றுவார்கள் வீடு வேலைத்தளம் என்பவற்றில் தமது கடமைகளை செய்து முடித்தாலும் அவர்களுடைய செயற்பாட்டுத்திறன் குன்றியிருக்கலாம்.
பதகளிப்பு நோயை அகப்பீதி நோய் அச்சநோய் என இரண்டாகப்பிரிக்கலாம் அவற்றின் குணயியல்பினை எடுத்துக்கொண்டால் தசை இறுக்கம், உடல் பதறுதல் ,திடுக்கிடுதல் ,நடுக்கம், நெஞ்சு நோ,தசைகளில்நோ,சோர்வுறும்தன்மை, தளர்வாக
இருக்கமுடியாத தன்மை,அமைதியற்ற மனநிலை, சுவாசவீதம் அதிகரித்துக்
காணப்படல், மனதை ஒருமுகப்படுத்த முடியாமை , நரம்பு சார்ந்த ஒருவகை தோல்
அலர்ச்சி , போன்றவையும் பெண்களில் மாதவிடாய் கோளாறுகள்,
கருச்சிதைவுகள்,குறைப்பிரசவம், என்பனவும் ஏற்படலாம் இவ்வாறு பதகளிப்பு
நோய் காணப்படுகின்றபோதிலும் துன்ப உணர்வினைத்தோற்றவிக்கும்
அனுபவத்திற்கு அளவொத்த தன்மையில் தோன்றும். உளச்சோர்வு தொடர்ச்சியாக
ஏற்படம்போது கவலை,சோகம் ,இன்பத்தை இழத்தல், ஆர்வமின்மை,போன்றன
ஏற்படுகின்றன இவை இழப்பினால் ஏற்படுகின்றன உறவுகள் உடைமை கௌரவம்
என்பனவற்றில் இழப்புக்காணப்படும் பொழுது மனச்சோர்வ ஏற்படுகின்றது.
இதன்குணம் குறிகளாக சோர்வான மனநிலை, எதிலும் அக்கறையின்மை, வழமையான செயற்பாடுகளில் மகிழ்ச்சியற்ற நிலை, உடல் பலவீனமுற்றது போன்ற உணர்வு, தான் எதற்கும் தகுதியற்றவர் என்ற உணர்வு, சுறுசுறுப்புக்குறைவ எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கையீனம், தேகம் மெலிதல், இறப்பு அல்லது தற்கொலை பற்றி திரும்பத்திரும்ப நினைத்தல், பாலியல் உணர்வு குன்றல், மனச்சோர்வு, நோய்ஆகலாம் .
உள நெருக்கிடுகளின் விளைவாக ஒருவரின் குரோத மனப்பாண்மை மேலோங்கலாம் அதன் விளைவாக மற்றவர்களுடன் அனாவசியமான விடயங்களுக்கெல்லாம் வாக்குவாதப்படல், காரணமின்றி கோவப்படல் சிறு சிறு சொல்லிற்கு எரிந்து விழல்,ஒரு பொருளை அடித்த நொருக்கவேண்டும் என்ற உந்துதல் எழல், இது குரோதம் நோய்ஆகும்.
போரனத்தச்சூழலானது ஒருவரின் குடும்ப சமூகக்கட்டமைப்புக்களைத்தாக்கி பல்வேறு உறவுச்சிக்கல்களையும் ஏற்படுத்துவது குறிப்பாக குடும்பப்பிரச்சினைகள் முரண்பாடுகள், பேச்சு மூலமான ,அல்லது உடல் மூலமான,தாக்குதல்கள் காரணமாகவே உறவுச்சிக்கல்கள் தோன்றுகின்றன இதன் விளைவாக அக்கறையின்மை எதிலும் பற்றற்ற தன்மை சுயநலம் அல்லது சமூகத்திலிருந்து ஒதுங்கியிருத்தல் தனிமையிலிருக்க விரும்புதல் போன்றன ஏற்படலாம்.
திருமணமானவர்களைப்பொறுத்தவரையில ் நெருக்கீடுகளும் இடம்பெயர்ந்த வாழ்க்கையும் தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தியிருங்கின்றது.
இதனை விட முகாம் களில் கூடிவாழுகின்றபோது சமூகச்சீர்கேட்டிற்கு ஆளாகும் நிலை ஏற்படுத்தியிருங்கின்றது பிள்ளைகளைப் பொறுத்தவரையில் நடத்தைக்குழப்பம்,கடமையில் தவறுதல்,சிறுபிள்ளைத்தனமான நடத்தைகள் ,படுக்கையில் சிறு நீர் கழித்தல் ,அடம்பிடித்தல் போன்றன காணப்படலாம்.
உள நெருக்கீட்டிலிருந்து குடும்ப பொருளாதார நெருக்கீடுகளில் இருந்தும் தப்பிக்கொள்வதற்கான இக்கொடிய பழக்கங்களுக்கு ஆளாக்குகின்றனர் மது புகைத்தல் , ஆகிய இரண்டும் ஒருவரை நோய்க்குள்ளாக்குகின்றது பல பிரச்சினைகளைத்தாங்க முடியாத தன்மைகள் ஏற்படும்போது இவ்வாறான பழக்கங்களில் ஈடுபடுகின்றனர்.
அகதிமுகாம்வாழ்க்கை ஒருவரை மிகவும் பாதிக்கின்றது காரணம் வேலையில்லாப்பிரச்சினை, கலாச்சார வறுமை,குடும்பச்சச்சரவு,பொருளாத ாரப்பிரச்சினைகள்
போன்ற நெருக்கீடுகளில் அதிக வெறியூட்டும் குடி வகைகளை உபயோகித்து
தங்களையே தாங்கள் தீய பழக்கங்களுக்கு ஆளாக்குகின்றனர். இது மது போதை
வஸ்து பாவனையாகும்.
நெருக்கீட்டின் விளைவினால் ஒருவரின் செயலாற்றலானது பாதிக்கப்படலாம் முக்கியமாக அவரின் சாதாரண நாளாந்த கடமைகளைச் செய்யமுடியாத நிலமையில் கஸ்டப்படலாம் அத்தோடு வேலைத்தளத்தில் வேலைசெய்பவர் தமது கடமைகளைச்செய்யமுடியாது உள்ளமையும் ஒருவர் நெருக்கீட்டிற்கு உள்ளாகி இருக்கும்போது அவரின் உளநிலையைக் கவனத்தடன் அணுகி புரிந்துணர்வுடன் செயற்படல் வேண்டும். எனவே இவ்வாறு தொகுத்து நோக்கும்போது போரினால் மக்கள் பலதரப்பட்ட துன்பங்களை அனுபவித்த அதிலிருந்து மீள முடியாமல் உடல் உளம் ஆகிய இரண்டாலும் பாதிப்படைவதோடு கூடுதலானோர் நோயாளியாகவே ஆகின்றனர்.
இலங்கையில் இடம் பெற்றுவரும் போரியலில் இடப்பெயர்வு அகதி வாழ்க்கை என்பவற்றால் பல தரப்பட்டவர்களிடத்தில் தற்கொலை எண்ணம் காணப்படுகின்ற போதிலும் ஆயுத மோதல்கள் பல தரப்பட்ட முறையில் இடம் பெறுவதையும் இன மத அரசியல் குழுக்களுக்கிடையே இடம் பெறுவதனாலும் இவற்றில் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கின்ற உள்ளாகக் கூடியவர்கள் மத்தியில் தற்கொலைக்குள்ளானவர்களும் தற்கொலை எண்ணத்துடன் காணப்படுபவர்களில் பல சாரரும் காணப்படுகின்ற போதிலும் ஆயதப்படைப்புகளைச் சார்ந்தவர்களும் சோசலிச குடி அரசின் அப்பாவிப் பொது மக்களும் இப்பாதிப்புக்கு உள்ளாகின்றர்கள்.
போரியல் சீற்றத்தினால் உயிர் வாழ அடிப்படை வசதிகள்,மருத்துவ வசதிகள், மனித உரிமைகள் மீறப்படுவதாலும் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர் தம்மையும் தமது இழப்பு, பிரிவு,குடும்பத்தை காப்பாற்ற போதிய வழிகளின்மையாலும் கடத்தல் காணமல்ஆக்கப்படல் ,சித்திரவதை செய்யப்படுதல், பாலியல் வன்செயல்கள் மாற்றமுடியாத பாரிய நோய்கள் , அங்கங்களை இழத்தவர்கள் காயமடைந்தவர்கள் வசிப்பிடங்களில் இருந்த விரட்டப்பட்டு நலன்புரி நிலைய வாழ்க்கை அநாதரவாதல் என்பனவற்றின் மூலம்தற்கொலை முடிவுகள் எடுக்கப் படுகின்றபோதிலும் தற்போது விஞ்ஞானரீதியான மருத்தவமும் அதன் ஒரு துறையான உள மருத்துவமும் நன்கு வளர்ச்சிபெற்ற விட்டது .
மிகத்தீவிரமானதும் உளமருத்தவரால் சிகிச்சை அழிக்கப்படவேண்டியதுமான உள நெருக்கீட்டு உள நோய்களைத்தவிர ஏனையோர் விடயத்தில் உளவளத்துணையாளர்களின் பங்களிப்பு பெரிதும்வேண்டியதொன்று இவர்கள் வாழ்க்கையில் விரக்தி அச்சங்களை நீக்கி தமது வாழ்க்கையில் அர்த்தத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த முயலவேண்டும் இதன் மூலம் ஈற்றில் மன நலனைப் பேணிட வழி வகுக்கலாம்.
இலங்கையின் மனித வரலாற்றில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுபோரியல் அனர்த்தங்களின் விளைவாக உளத்தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகள் முரண்பாடுகள்
உறவுசச்சரவுகள் இடப்பெயர்வுகள் இழப்புக்கள் பிரிவு பேரழிவுகள் என்பவற்றின் உள்விளைவுகளையே போரியல் நெருக்கீடு எனலாம்.
குறிப்பாக வடக்கு கிழக்குப்பிரதேசத்தில் நடைபெற்ற கொடிய போரினால் மக்கள் அதிகமான உளநெருக்கீட்டிற்கு உள்ளாகியுள்ளனர். இவற்றில் சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகள், விசேடதேவைக்கு, உட்பட்டோர் வயோதிபர்கள், என்ற வயது பால் என்ற வேறுபாடின்றி மக்கள் பாரிய உள நெருக்கீட்டைச் சந்தித்துள்ளனர் என்பதை நமது கண்கள் ஊடாக காணமுடிகின்றது.
உடல் ரீதியான நோய்கள் ஏற்படுவதைப்போன்று உளரீதியானநோய்களும் எற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் போரியலினால் பலவிதமான பாரிய உளநோய்களை கொண்டுள்ளோர் உருவாகின்றார்கள் .
இவர்களை பல பெயர் குறித்து முத்திரை குத்தி சமூகத்திலிருந்து விலகிவிடுகின்றனர் அதேவேளை படித்தவர்கள்கூட உளநோயால் பாதிக்கப்பட்டவரை மூடிமறைத்துவைத்து அவர்களுக்காக மருத்துவம் பார்க்காத நிலையும் காணப்படுகின்றது.
இதனால் பல்வேறுபட்ட உளநோய்களை உருவாக்குவதற்கும் காரணமாக அமைகின்றது போர்நெருக்கீட்டுத்தாக்கங்களால்
தலைமுதல் கால்வரையுள்ள உறுப்புக்கள்பற்றிய அறிகுறிகளை வெளிப்படுத்தலாம் இந்நோயை மருத்துவ பரிசோதனை சாதாரணமாகவே காணப்படும் இவர்கள் உடலில் ஆங்காங்கே ஏற்படும் நோவுபோன்ற முறைப்பாடுகளைக் கொண்டிருப்பர்.
ஆனால் நோயைக்கண்டுபிடிக்க கடினமாக இருக்கும் உடல்முழுவதும் நோவு நெஞ்சிறுக்கம் தொடர்ச்சியான களைப்பு தலையிடி போன்றவைகள் கூட இருக்கலாம் இவர்களுக்கு சில வேளைகளில் மிதமான உளநோய்யும் கூட இருக்கலாம் இவற்றை மெய்பாட்டு முறைப்பாட்டுநோய் எனலாம்.
பொதுவான மனித அனுபவத்திற்கு அப்பாற்பட்ட ஓர் உளரீதியான நெருக்கீட்டைத் தொடர்ந்து ஏற்படும்நோயாகும். அதாவது கொடூர ஆபத்தான சம்பவங்கள் போன்றவற்றினாலும் மனவடுநோய்கள் பயங்கர அனுபவங்களின் விளைவுகள்ஆகும்.
மனிதனால் விளைவிக்கப்பட்ட போர்ச்சூழலால் ,சித்திரவதை தடுப்புக்காவல், பாலியல் பலாத்காரம் ,கண்ணிவெடி போன்றவையினால் ஏற்படுகின்றன
இயற்கையினால் சுனாமி, புயல்காற்று, சூறாவளி , வெள்ளப்பெருக்கு, போன்றவைகளால் உளம் மிக வெகுவாக பாதிப்படையலாம் . இதனால் ஏற்படும் அறிகுறிகளாக குறித்த கொடூரமான நிகழ்வு அல்லது சம்பவம் பற்றிய சிந்தனைகள் மீள மீள மனதில் எழுதல் அச்சம்பவம் பற்றிய கனவுகள் திரும்பத்திரும்ப ஏற்படுதல் மிதம் அஞ்சிய யாக்கிரதை ,நித்திரைக்குழப்பம், மனதை ஒருநிலைப்படுத்தமுடியாதநிலை, ஞாபகமறதி, சிலவேளைகளில் குற்ற உணர்வாக செய்திருக்கக்கூடிய ஒன்றை செய்யாமல்விட்டுவிட்டேன், என்ற உணர்வு ஏற்படலாம்.
போர் நடக்கும் சூழ்நிலையில் சித்திரவதைக்குட்பட்ட ஒருவரிடத்தில் பல அறிகுறிகளும் முறைப்பாடுகளும் தோன்றலாம் மீள மீள இது முக்கியமான பயத்தை அடிப்படையாகக்கொண்ட எதிர்தாக்கமாகும். குறிப்பாக வருங்காலத்தைப்பற்றி அளவுக்குமீறிய பயவுணர்வை உடையதாகயிருக்கலாம் பொதுவாக பதகளிப்புடையவர்கள் சாதாரண மனிதர்களாகத் தோன்றுவார்கள் வீடு வேலைத்தளம் என்பவற்றில் தமது கடமைகளை செய்து முடித்தாலும் அவர்களுடைய செயற்பாட்டுத்திறன் குன்றியிருக்கலாம்.
பதகளிப்பு நோயை அகப்பீதி நோய் அச்சநோய் என இரண்டாகப்பிரிக்கலாம் அவற்றின் குணயியல்பினை எடுத்துக்கொண்டால் தசை இறுக்கம், உடல் பதறுதல் ,திடுக்கிடுதல் ,நடுக்கம், நெஞ்சு நோ,தசைகளில்நோ,சோர்வுறும்தன்மை,
இதன்குணம் குறிகளாக சோர்வான மனநிலை, எதிலும் அக்கறையின்மை, வழமையான செயற்பாடுகளில் மகிழ்ச்சியற்ற நிலை, உடல் பலவீனமுற்றது போன்ற உணர்வு, தான் எதற்கும் தகுதியற்றவர் என்ற உணர்வு, சுறுசுறுப்புக்குறைவ எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கையீனம், தேகம் மெலிதல், இறப்பு அல்லது தற்கொலை பற்றி திரும்பத்திரும்ப நினைத்தல், பாலியல் உணர்வு குன்றல், மனச்சோர்வு, நோய்ஆகலாம் .
உள நெருக்கிடுகளின் விளைவாக ஒருவரின் குரோத மனப்பாண்மை மேலோங்கலாம் அதன் விளைவாக மற்றவர்களுடன் அனாவசியமான விடயங்களுக்கெல்லாம் வாக்குவாதப்படல், காரணமின்றி கோவப்படல் சிறு சிறு சொல்லிற்கு எரிந்து விழல்,ஒரு பொருளை அடித்த நொருக்கவேண்டும் என்ற உந்துதல் எழல், இது குரோதம் நோய்ஆகும்.
போரனத்தச்சூழலானது ஒருவரின் குடும்ப சமூகக்கட்டமைப்புக்களைத்தாக்கி பல்வேறு உறவுச்சிக்கல்களையும் ஏற்படுத்துவது குறிப்பாக குடும்பப்பிரச்சினைகள் முரண்பாடுகள், பேச்சு மூலமான ,அல்லது உடல் மூலமான,தாக்குதல்கள் காரணமாகவே உறவுச்சிக்கல்கள் தோன்றுகின்றன இதன் விளைவாக அக்கறையின்மை எதிலும் பற்றற்ற தன்மை சுயநலம் அல்லது சமூகத்திலிருந்து ஒதுங்கியிருத்தல் தனிமையிலிருக்க விரும்புதல் போன்றன ஏற்படலாம்.
திருமணமானவர்களைப்பொறுத்தவரையில
இதனை விட முகாம் களில் கூடிவாழுகின்றபோது சமூகச்சீர்கேட்டிற்கு ஆளாகும் நிலை ஏற்படுத்தியிருங்கின்றது பிள்ளைகளைப் பொறுத்தவரையில் நடத்தைக்குழப்பம்,கடமையில் தவறுதல்,சிறுபிள்ளைத்தனமான நடத்தைகள் ,படுக்கையில் சிறு நீர் கழித்தல் ,அடம்பிடித்தல் போன்றன காணப்படலாம்.
உள நெருக்கீட்டிலிருந்து குடும்ப பொருளாதார நெருக்கீடுகளில் இருந்தும் தப்பிக்கொள்வதற்கான இக்கொடிய பழக்கங்களுக்கு ஆளாக்குகின்றனர் மது புகைத்தல் , ஆகிய இரண்டும் ஒருவரை நோய்க்குள்ளாக்குகின்றது பல பிரச்சினைகளைத்தாங்க முடியாத தன்மைகள் ஏற்படும்போது இவ்வாறான பழக்கங்களில் ஈடுபடுகின்றனர்.
அகதிமுகாம்வாழ்க்கை ஒருவரை மிகவும் பாதிக்கின்றது காரணம் வேலையில்லாப்பிரச்சினை, கலாச்சார வறுமை,குடும்பச்சச்சரவு,பொருளாத
நெருக்கீட்டின் விளைவினால் ஒருவரின் செயலாற்றலானது பாதிக்கப்படலாம் முக்கியமாக அவரின் சாதாரண நாளாந்த கடமைகளைச் செய்யமுடியாத நிலமையில் கஸ்டப்படலாம் அத்தோடு வேலைத்தளத்தில் வேலைசெய்பவர் தமது கடமைகளைச்செய்யமுடியாது உள்ளமையும் ஒருவர் நெருக்கீட்டிற்கு உள்ளாகி இருக்கும்போது அவரின் உளநிலையைக் கவனத்தடன் அணுகி புரிந்துணர்வுடன் செயற்படல் வேண்டும். எனவே இவ்வாறு தொகுத்து நோக்கும்போது போரினால் மக்கள் பலதரப்பட்ட துன்பங்களை அனுபவித்த அதிலிருந்து மீள முடியாமல் உடல் உளம் ஆகிய இரண்டாலும் பாதிப்படைவதோடு கூடுதலானோர் நோயாளியாகவே ஆகின்றனர்.
இலங்கையில் இடம் பெற்றுவரும் போரியலில் இடப்பெயர்வு அகதி வாழ்க்கை என்பவற்றால் பல தரப்பட்டவர்களிடத்தில் தற்கொலை எண்ணம் காணப்படுகின்ற போதிலும் ஆயுத மோதல்கள் பல தரப்பட்ட முறையில் இடம் பெறுவதையும் இன மத அரசியல் குழுக்களுக்கிடையே இடம் பெறுவதனாலும் இவற்றில் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கின்ற உள்ளாகக் கூடியவர்கள் மத்தியில் தற்கொலைக்குள்ளானவர்களும் தற்கொலை எண்ணத்துடன் காணப்படுபவர்களில் பல சாரரும் காணப்படுகின்ற போதிலும் ஆயதப்படைப்புகளைச் சார்ந்தவர்களும் சோசலிச குடி அரசின் அப்பாவிப் பொது மக்களும் இப்பாதிப்புக்கு உள்ளாகின்றர்கள்.
போரியல் சீற்றத்தினால் உயிர் வாழ அடிப்படை வசதிகள்,மருத்துவ வசதிகள், மனித உரிமைகள் மீறப்படுவதாலும் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர் தம்மையும் தமது இழப்பு, பிரிவு,குடும்பத்தை காப்பாற்ற போதிய வழிகளின்மையாலும் கடத்தல் காணமல்ஆக்கப்படல் ,சித்திரவதை செய்யப்படுதல், பாலியல் வன்செயல்கள் மாற்றமுடியாத பாரிய நோய்கள் , அங்கங்களை இழத்தவர்கள் காயமடைந்தவர்கள் வசிப்பிடங்களில் இருந்த விரட்டப்பட்டு நலன்புரி நிலைய வாழ்க்கை அநாதரவாதல் என்பனவற்றின் மூலம்தற்கொலை முடிவுகள் எடுக்கப் படுகின்றபோதிலும் தற்போது விஞ்ஞானரீதியான மருத்தவமும் அதன் ஒரு துறையான உள மருத்துவமும் நன்கு வளர்ச்சிபெற்ற விட்டது .
மிகத்தீவிரமானதும் உளமருத்தவரால் சிகிச்சை அழிக்கப்படவேண்டியதுமான உள நெருக்கீட்டு உள நோய்களைத்தவிர ஏனையோர் விடயத்தில் உளவளத்துணையாளர்களின் பங்களிப்பு பெரிதும்வேண்டியதொன்று இவர்கள் வாழ்க்கையில் விரக்தி அச்சங்களை நீக்கி தமது வாழ்க்கையில் அர்த்தத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த முயலவேண்டும் இதன் மூலம் ஈற்றில் மன நலனைப் பேணிட வழி வகுக்கலாம்.
No comments:
Post a Comment