June 7, 2016

தரைமட்டமான சலாவ இராணுவ முகாம்!அதிர்ச்சியில் இராணுவம்

கொஸ்கம – சலாவ சிறிலங்கா இராணுவ முகாம் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தினால் முற்றாகவே அழிந்து போயுள்ளது.
வெடிபொருள்கள் சேமிக்கப்பட்டிருந்த, கட்டங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து தரைமட்டமாகியுள்ளன.

ஆயுதக் கிடங்கி்ல் பற்றிய தீ அணைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள பேரழிவை சில ஊடகவியலாளர்கள் ஒளிப்படம் எடுத்துள்ளனர்.

இதில், சலாவ இராணுவ முகாம் உருத்தெரியாமல், சிதைந்து கிடக்கிறது. அதனைச் சுற்றியுள்ள பிரதேசமே, அழிவுப் பிரதேசமாக காட்சியளிக்கிறது.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில், சலாவ இராணுவ முகாம் சிதைந்து போய்க் காட்சியளிக்கிறது. அதனைச் சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமடைந்துள்ளன.








No comments:

Post a Comment