நல்லிணக்கப் பொறிமுறைகள் உருவாக்குவது தொடர்பில் மக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, செயலணி ஒன்று மன்னார் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலணிக்கு மக்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் தேவைப்படுகின்றது.
செயலணி உங்களை நோக்கி வருகின்ற போது, உங்களின் ஆதரவையும், முக்கியமான கருத்துக்களையும் மிக உறுதியுடன் பதிவு செய்யுங்கள் என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் கேட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் சபையில், இலங்கை அரசு சில உறுதிமொழிகளை வழங்கியது.
காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகம், உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள நிகழாமை தொடர்பான ஆணைக்குழு, விசேட வழக்கு தொடுப்போருக்கான நீதிப் பொறிமுறை, இழப்பீடுகளுக்கான அலுவலகம் போன்றவற்றை அமைப்பதாக அரசு ஜெனிவாவில் உறுதிமொழி வழங்கியது.
எனவே, அந்தப் பொறிமுறைகளை நியமிப்பதற்கு அரசு கடந்த ஜனவரி மாதம் 26ம் திகதி நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி ஒன்றை நியமித்தது.
குறித்த பொறிமுறைகள் எவ்வாறு அமையவேண்டும் என்று மக்களின் கருத்துக்களைக் கேட்டு அதனை அரசுக்கு வழங்குவதே செயலணியின் செயற்பாடு.
ஆகவே பிரதமரால் நியமிக்கப்பட்ட 11 அங்கத்துவர்களைக்கொண்ட நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியானது, கடந்த 11,12,13ம் திகதிகளில் 'வலயச் செயலணி' ஒன்றை உருவாக்கியது.
மாவட்ட மட்டத்தில் மக்களிடம் சென்று கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அதனூடாகக் கிடைக்கப்பெற்ற விடயங்களை ஆவணப்படுத்துவதும், அதனை அரசுக்கு வழங்குவதுமே இந்த வலயச் செயலணியின் செயற்பாடாகும்.
நாங்கள் தற்போது ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். கடந்த 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், அரசு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவியது. அதன் பின்னர் பரணகம ஆணைக்குழுவை நியமித்தது. இந்த இரண்டு ஆணைக்குழுக்களும் அரசினால் நியமிக்கப்பட்டவை என்பதால், மக்களின் கருத்துக்களைக் கேட்கவில்லை.
இவை மக்களின் கருத்துக்குப் புறம்பான ஆணைக்குழுக்களாகவே இருந்தன என வடக்கு - கிழக்கில் உள்ள மனித உரிமைகள் ஆர்வலர்கள் பல அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.
ஆகவே, மீண்டும், மீண்டும் அரசு இவ்வாறான செயற்பாடுகளைச் செய்யக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை கேட்டுப் பொறிமுறைகளை அமைக்க வேண்டும். அதனூடகவே பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட முடியும் என்று பல்வேறு வலியுறுத்தல்களை மேற்கொண்டதன் அடிப்படையிலும், உலக நாடுகளின் அழுத்தத்தின் அடிப்படையிலும் குறித்த வலயச் செயலணியானது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலணி மக்களிடம் சென்று கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் மக்கள் சரியான கருத்துக்களைக் கூற வேண்டிய கட்டாய நிலை உள்ளது. அந்தக் கருத்துக்கள் எந்தவித ஒழிவு மறைவும் இன்றி, அவை எங்களுடைய மாவட்டத்திலே ஆவணப்படுத்தப்பட்டு அரசுக்கு வழங்கி வைக்கப்படும். எனவே, அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் கருத்துக்களை அரசு முன்னுரிமைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் - என்றார்.

No comments:
Post a Comment