June 18, 2016

மனமாற்றம் வருமா? செல்­வ­ரட்னம் சிறி­தரன்

இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு இரா­ணுவ ரீதி­யாகத் தீர்வு காண முடி­யாது என்­பதை முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்து, முடி­வுக்கு வந்­துள்ள யுத்த மோதல்கள் தெளி­வாக உணர்த்­தி­யி­ருக்­கின்­றன.
இருந்த போதிலும், இரா­ணுவ அர­சியல் மேலா­திக்­கத்தின் ஊடா­கவே தீர்வு காண முடியும் என்ற நப்­பாசை பேரின அர­சி­யல்­வா­தி­க­ளி­ட­மி­ருந்து இன்னும் மறை­ய­வில்லை.

இரா­ணு­வத்தைக் கொண்டு தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான ஆயுதப் போராட்­டத்தை முறி­ய­டித்­துள்ள ஆட்­சி­யா­ளர்கள், இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணும் விட­யத்தில் தீவிர அக்­கறை காட்­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. மாறாக காலத்தைக் கடத்தி பிரச்­சி­னைக்கு மேல் பிரச்­சி­னை­களை அதி­க­ரித்து, அர­சியல் ரீதி­யாக ஒடுக்­கப்­பட்டு வந்­துள்ள மக்­களின் போராட்ட உணர்வை மழுங்­க­டித்து இல்­லாமற் செய்­வ­தி­லேயே குறி­யாக இருந்து செயற்­ப­டு­கின்ற ஒரு போக்­கி­லேயே சென்று கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

விடு­த­லைப்­பு­லி­களை இரா­ணுவ ரீதி­யாக வெற்­றி­கொண்­ட­தை­ய­டுத்து, இன முறு­கலை இல்­லாமற் செய்­வ­தற்கு தீர்க்­க­மா­னதோர் அர­சியல் ரீதி­யான அணு­கு­மு­றையைக் கையாள்­வ­தற்கு ஆட்­சி­யா­ளர்கள் இன்­னுமே தயா­ரா­க­வில்லை. அர­சுக்கு எதி­ராக ஆயு­த­மேந்திப் போ­ரா­டிய விடு­த­லைப்­பு­லி­களை இல்­லாமற் செய்­ததன் பின்னர், யுத்த மோதல்­க­ளினால் மோச­மாகப் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனங்­களை வெற்றி கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­திலும் அவர்கள் அதிக அக்­கறை காட்­டாத போக்­கையே காண முடி­கின்­றது.

யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியை நீதிக்­கான நிலை­மாறு காலம் என வர்­ணித்து, நடந்து முடிந்த அநி­யா­யங்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. நீதியைத் தேடு­கின்ற நிலை­மாற்றுக் காலத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மிகவும் கசப்­பான துன்­பியல் அனு­ப­வங்கள், மனத்­து­ய­ரங்­களில் இருந்து அவர்கள் மீள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்க வேண்டும். அத்­த­கைய நட­வ­டிக்­கை­களின் ஆரம்­பத்தைக் கூட யுத்த மோதல்­களின் பின்­ன­ரான கடந்த ஏழு வருட காலத்தில் காண முடி­ய­வில்லை.

உற்­ற­வர்­களின் உயிர்­க­ளையும், உடை­மை­க­ளையும் உயி­ருக்கும் மேலாகக் கரு­தப்­ப­டு­கின்ற கௌர­வத்­தையும் இழந்து உள­வியல் ரீதி­யாகப் பாதிக்­கப்­பட்டு ஏதி­லி­க­ளா­கி­யுள்ள மக்­களின் மனக்­கா­யங்­களை ஆற்றி அவர்­களை ஆற்­றுப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்க வேண்டும்.

ஆனால் அத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளுக்கு யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த ஜனா­தி­பதி மஹிந்த தலை­மை­யி­லான அர­சாங்கம் இடம் கொடுக்­க­வில்லை. அவ்­வா­றான ஆற்­றுப்­ப­டுத்தல் நட­வ­டிக்­கை­யா­னது, பயங்­க­ர­வா­தத்­திற்கு உயி­ரூட்­டு­வ­தா­கவும், பயங்­க­ர­வா­தி­களை மீளு­ரு­வாக்கம் செய்­வ­தா­க­வுமே முடியும் எனக் கூறி தடை செய்­தி­ருந்தது.

மஹிந்த ராஜ­பக்­சவைத் தேர்­தலில் தோற்­க­டித்து நல்­லாட்சி அர­சாங்­கத்தை அமைத்­துள்ள புதிய ஆட்­சி­யா­ளர்­களும் கூட, யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனக்­கா­யங்­களை ஆற்­று­வ­தற்­கான உள­வியல் ரீதி­யான ஆற்­றுப்­ப­டுத்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்­த­தாகத் தெரி­ய­வில்லை.
நடந்து முடிந்த யுத்­த­மா­னது பாதிக்­கப்­பட்ட மக்­களை சாவின் விளிம்­பிற்கே இழுத்துச் சென்று, தெய்­வா­தீ­ன­மாக உயிர் தப்பச் செய்­துள்­ளது.

அவர்கள் அனு­ப­வித்த மரண வேத­னை­களும் மனத்­து­ய­ரங்­களும் உரக்க அழுது, உருண்டு புரண்டு, அரற்றி பகி­ரப்­பட வேண்­டி­யவை. அந்த யுத்த மன வடுக்­க­ளையும் மனச்­சு­மை­க­ளையும் அவர்கள் பொதி சுமந்­த­வர்­க­ளாக உள்­ளங்­களில் சுமந்து தவித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

அவலச் சாவு­களின் மூலம் இழந்து போன தமது உற­வு­களின் இழப்பை உள­வியல் ரீதி­யாக ஆற்­றிக்­கொள்­வ­தற்கு அவர்­க­ளுக்கு இன்னும் சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வில்லை.

கரை புரண்ட வெள்ளம் போன்று, கூட்டம் கூட்­ட­மாக இடம்­பெ­யர்ந்து கூட்­ட­மாக அவ­லப்­பட்டு, உயி­ரி­ழப்­புக்­களைச் சந்­தித்த அவர்கள் கூட்­ட­மாகக் கூடி அவ­ல­மாக மடிந்த போன தமது உற­வு­களை நினை­வு­கூ­ரவும், அஞ்­சலி செலுத்தி அவர்­களின் ஆன்மா சாந்­தி­ய­டைய பிரார்த்­திக்­கவும் முடி­யா­த­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள்.

நீதிக்­கான நிலை­மாற்று காலத்தில் முதல் நட­வ­டிக்­கை­யாக இறு­திக்­கட்ட யுத்­தத்தில் உயி­ரி­ழந்­த­வர்­களை பாதிக்­கப்­பட்ட மக்கள் என்ற ரீதியில் ஒரு சமூ­க­மாக நினைவு கூர்­வ­தற்கும் மன ஆறுதல் அடை­வ­தற்கும் வழி­யேற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும்.

ஒரு சமூ­க­மாக அவர்கள் இறந்­த­வர்­களை நினை­வு­கூ­ரும்­போது, அய­ல­வர்­க­ளான ஏனைய சமூ­கத்­தி­ன­ருடன் தமது மனச்­சு­மை­களைப் பகிர்ந்து கொள்­வ­தற்­கு­ரிய சந்­தர்ப்பம் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். இத்­த­கைய ஒன்று கூடலின் ஊடா­கத்தான் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனக்­கா­யங்கள் ஆறு­வ­தற்கும், மற்ற இனத்­தவர் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் மன உணர்­வு­களைச் சரி­யாகப் புரிந்து கொள்­வ­தற்கும் வாய்ப்பு ஏற்­பட்­டி­ருக்கும்.

மன­மாற்றம் அவ­சியம்

தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான ஆயுதப் போராட்­ட­மா­னது, பயங்­க­ர­வா­த­மாகச் சித்­திரிக்­கப்­பட்டு பெரும்­பான்மை இன மக்கள் மத்­தியில் ஆயு­த­மேந்திப் போரா­டிய விடு­த­லைப்­பு­லி­களும் அவர்­க­ளுக்குப் பின்னால் இருந்த மக்­களும் பயங்­க­ர­வா­தி­க­ளாக உரு­வ­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். யுத்தம் முடி­வ­டைந்து ஏழு வரு­டங்கள் கழிந்­து­விட்ட போதிலும், பெரும்­பான்மை இன மக்கள் மத்­தியில் தமிழ் மக்கள் பற்றி அர­சியல் ரீதி­யாக உரு­வாக்­கப்­பட்ட கருத்­து­ரு­வாக்­கத்தில் இருந்து பெரும்­பான்மை இன­மக்கள் இன்னும் விடு­ப­ட­வில்லை.

நாட்டில் நிரந்­த­ர­மான அமை­தியும் இனங்­க­ளுக்­கி­டையில் ஐக்­கி­யமும் நல்­லிணக்­கமும் நிலவ வேண்­டு­மானால், இரு தரப்­பி­ன­ருக்கும் இடையில் யுத்தம் முடி­வ­டையும் வரையில் இருந்து வந்த மன நிலை­களில் இருந்து மாற்றம் ஏற்­பட வேண்­டி­யது மிகவும் முக்­கி­ய­மாகும். ஒரு­வரை ஒருவர் சந்­தே­கத்­து­டனும் உயி­ரச்­சத்­து­டனும் நோக்­கிய நிலை­மை­களில் இருந்து உள­வியல் ரீதி­யாக இரு­த­ரப்­பி­ன­ரி­டை­யேயும் மன­மாற்றம் ஏற்­பட்­டி­ருக்க வேண்டும். இத­னையோர் அர­சியல் ரீதி­யான நட­வ­டிக்­கை­யாக அர­சாங்­கங்கள் முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும்.

அந்­நி­ய­ரா­கிய ஆங்­கி­லே­ய­ரி­ட­மி­ருந்து சுதந்­திரம் பெற்­றதன் பின்னர், படிப்­ப­டி­யாக – திட்­ட­மிட்டு, பேரின ஆட்­சி­யா­ளர்கள் மேற்­கொண்டு வந்த இனத்­து­வேச அர­சியல் நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக இந்­த­நாட்டின் இரண்டு முக்­கிய சமூ­கத்­தி­ன­ரா­கிய சிங்­க­ள­வர்­களும் தமி­ழர்­களும் ஒரு­வ­ரை­யொ­ருவர் அர­சியல் ரீதி­யாக மோச­மான எதி­ரி­க­ளாகக் கரு­து­கின்ற போக்கும் படிப்­ப­டி­யாக வளர்ந்து உச்­ச­கட்ட நிலையை எட்­டி­யி­ருக்­கின்­றது.

சிங்­க­ள­வர்­களும் தமி­ழர்­களும் நாளாந்த வாழ்க்­கையில் இணைந்து பழகி வரு­கின்­றார்கள். அயல் அயல் வீடு­க­ளிலும், அயல் அயல் கிரா­மங்­க­ளிலும், நக­ரங்­க­ளிலும் வசித்து வரு­கின்­றார்கள். வெளிப்­ப­டை­யான நோக்கில் அவர்கள் ஒற்­று­மை­யா­கவும், சமா­தா­ன­மா­கவும், ஐக்­கி­ய­மா­கவும் வாழ்­வ­தா­கவே தோன்றும்.

ஆனால் அர­சியல் ரீதி­யாக – இந்த நாட்டின் தேசிய இனங்கள் என்ற அடிப்­ப­டையில் அவர்­க­ளு­டைய ஆழ் மனங்­களில் ஊடு­ருவிப் பார்த்தால், அவர்­களில் பெரும்­பான்­மை­யானோர் அர­சியல் ரீதி­யாக ஒரு­வரை ஒருவர் அவர்கள் எந்த அள­வுக்கு சந்­தே­கமும் அச்­சமும் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­பது புல­னாகும். விரல் விட்டு எண்ணக் கூடி­ய­வர்­களே அர­சி­ய­லுக்கு அப்பால் மனி­தா­பி­மான ரீதியில் இனம், அர­சியல் என்ற நிலை­மைகள் அந்­தஸ்­து­க­ளுக்கு அப்பால் அந்­நி­யோன்­னிய உறவு கொண்­ட­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றார்கள். அர­சியல் ரீதி­யான இந்த அச்­சமும், சந்­தே­க­மும்தான் இந்த நாட்டின் ஆட்­சி­யா­ளர்­களின் அர­சியல் முத­லீ­டு­க­ளாகத் திகழ்­கின்­றன.

இந்த முத­லீட்டின் அடிப்­ப­டை­யி­லேயே குறிப்­பாக பெரும்­பான்மை இன ஆட்­சி­யா­ளர்கள் இந்த நாட்டில் அர­சோச்சி வரு­கின்­றார்கள். ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்ற விரும்­பு­கின்ற இளம் தலை­மு­றை­யி­னரும் இந்த இனத்­து­வேச அர­சியல் போக்கில் இருந்து விடு­ப­டா­த­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றார்கள்.

இதன் கார­ண­மா­கவே இனப்­பிர்ச்­சி­னை­யா­னது இன்னும் தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னை­யாக – தீர்க்­கப்­படக் கூடாத பிரச்­சி­னை­யாக புரை­யோடிப் போயி­ருக்­கின்­றது.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான், மோச­மா­ன­தொரு முப்­பது வருட யுத்­தத்தின் பின்னர், ஏற்­பட்­டுள்ள மோதல்­களின் பின்­ன­ரான அமைதிச் சூழலில் இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்­தையும் ஐக்­கி­யத்­தையும் சமா­தா­னத்­தையும் உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்தச் சந்­தர்ப்­பத்­தையே, நீதிக்­கான நிலை­மாற்­றுக்­காலம் எனக் கூறி இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லு­றவை ஏற்­ப­டுத்­தவும், பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கு­மான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த முயற்­சி­க­ளுக்கு அடித்­த­ள­மாக அச்­சமும் சந்­தே­கமும் குடி­கொண்­டுள்ள இத­யங்­க­ளுடன் துருவ மயப்­பட்­டி­ருக்­கின்ற இரு சமூ­கத்­தி­ன­ரி­டையே மன­மாற்றம் ஏற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­யி­ருக்­கின்­றது.

இந்த மன­மாற்­றத்­திற்கு இரு தரப்­பி­னரும் கலந்­து­ரை­யாட வேண்டும். கருத்­துப்­ப­ரி­மாற்­றத்தில் ஈடு­பட வேண்டும். தமது கடந்­த­கால கசப்­பான அனு­ப­வங்­க­ளையும் துன்ப துய­ரங்­க­ளையும் மனி­தர்கள் என்ற ரீதியில் ஒரு­வ­ருக்­கொ­ருவர் பகிர்ந்து மனச்­சு­மை­களைக் களைய வேண்டும்.

இதற்கு நீதிக்­கான நிலை­மாற்­றுக்­காலம் உறு­தி­யான அடித்­த­ளத்­துடன் கூடிய செயற்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு வழி­யேற்­ப­டுத்திக் கொடுக்க வேண்டும்.

பெரும்­பான்மை என்ற சிறு­பான்­மை­யினர்

நாட்டின் பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்­களே அனைத்து விட­யங்­க­ளிலும் முதன்மை பெற்­ற­வர்­க­ளாகத் திகழ வேண்டும் என்ற நோக்­கத்­தி­லேயே பேரின அர­சியல் மனப்­பாங்கு கொண்ட அர­சி­யல்­வா­தி­களும் ஆட்­சி­யா­ளர்­களும் செயற்­பட்டு வரு­கின்­றார்கள். பேரின மத­மா­கிய பௌத்­தமே நாட்டில் முதன்மை பெற்­றி­ருக்க வேண்டும் என்­பதும் அவர்­க­ளு­டைய அர­சியல் தீர்­மா­ன­மாகும். இதன் கார­ண­மா­கவே இந்த நாடு சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கே சொந்­த­மா­னது என்ற அர­சியல் கொள்­கையும் அர­சியல் கோஷமும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அர­சியல் மற்றும் மத ரீதி­யான இந்த முதன்­மை­வாத அர­சியல் சிந்­தனைப் போக்கின் கார­ண­மா­கவே, தேசிய இன­மாக இருந்த போதிலும் தமிழ் பேசும் சமூ­கத்­தி­ன­ரா­கிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்கு என்ன வேண்டும் என்­பதைத் தாங்­களே தீர்­மா­னிக்க வேண்டும் என்று பேரின அர­சி­யல்­வா­திகள் அர­சியல் ரீதி­யாக அடம்­பி­டித்துச் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். தமிழ் மக்­களின் பாரம்­ப­ரிய தாயகப் பிர­தேசக் கொள்­கை­யையும், அவர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் என்­ப­தையும் அவர்கள் ஏற்க மறுக்­கின்­றார்கள். அதே­போன்று இஸ்­லா­மிய மத அடை­யா­ளத்தைக் கொண்ட முஸ்லிம் மக்­களின் மத சுதந்­திரம் மறுக்­கப்­ப­டு­கின்­றது. பௌத்த மதமே அர­சியல் அந்­தஸ்து பெற்ற தேசிய மத­மாக நாட­ளா­விய ரீதியில் பின்­பற்­றப்­பட வேண்டும் என்று அவர்கள் எதிர்­பார்க்­கின்­றார்கள்.

இந்த எதிர்­பார்ப்பை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கா­கவே, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மத ரீதி­யான அடக்­கு­முறை நட­வ­டிக்­கைகள் அவ்­வப்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்து ஆல­யங்கள் மீதும் அவ்­வப்­போது பேரின தீவி­ர­வா­திகள் பாய்ந்து கலக்­க­மூட்­டிய சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.
இந்த நாட்டைப் பொறுத்­த­மட்டில் குடி­சன எண்­ணிக்­கையின் அடிப்­ப­டையில் சிங்­கள மக்­களே பெரும்­பான்­மை­யான மக்­க­ளாகக் கரு­தப்­பட்­டாலும், தங்­க­ளிலும் பார்க்க பல மடங்­குகள் ஒப்­பீட்­ட­ளவில் சிறிய எண்­ணிக்­கை­யு­டைய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்­களை சிறு­பான்­மை­யி­ன­ராக்கி விடு­வார்­களோ என்று அர­சியல் ரீதி­யான அச்­சத்தைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

அயல் நாடா­கிய இந்­தி­யாவின் தமிழ் மாநி­ல­மா­கிய தமிழ்­நாடு, பூகோள ரீதி­யாக இலங்­கையில் தமி­ழர்கள் செறிந்து வாழும் யாழ்ப்­பா­ணத்­திற்கு மிகவும் அண்­மித்­தி­ருப்­ப­தனால், இலங்கைத் தமி­ழர்கள் தமிழ் நாட்­டி­ன­ருடன் இணைந்து தங்­களை எங்கே சிறு­பான்­மை­யி­னத்­த­வ­ராக மாற்றி அர­சியல் ரீதி­யாக ஆக்­கி­ர­மித்­து­வி­டு­வார்­களோ என்ற அச்சம் அவர்­க­ளு­டைய ஆழ் மனங்­களில் குடி கொண்­டி­ருக்­கின்­றது. அதே­போன்று உல­க­ளா­விய ரீதியில் நாடுகள் பல முஸ்லிம் நாடு­க­ளாக இருப்­ப­தனால், அவற்­றுடன் இணைந்து அல்­லது அவற்றின் உத­வி­களைப் பெற்று இலங்­கையில் உள்ள முஸ்லிம் மக்கள் தங்­களை ஆக்­கி­ர­மித்து விடு­வார்­களோ என்ற அச்­சமும் அவர்­க­ளிடம் மறைந்து காணப்­ப­டு­கின்­றது.

முடி­வில்­லாத மேலா­திக்கப் போக்கு

இதன் கார­ண­மா­கவே சிங்­கள அர­சி­யல்­வா­தி­களும் சிங்­கள ஆட்­சி­யா­ளர்­களும், இந்த நாட்டின் ஒரு தேசிய இன­மாக இருந்த போதிலும் தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் உரி­மைகள் என்ற ரீதியில் என்ன வேண்டும், எதனைக் கொடுக்­கலாம் என்­பதைத் தாங்­களே தீர்­மா­னிக்க வேண்டும் என்ற அர­சியல் நிலைப்­பாட்டில் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்லிம் மக்­களைப் பொறுத்­த­மட்­டிலும் இதே நிலைப்­பாட்­டையே அவர்கள் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.
இவ்­வாறு அர­சியல் ரீதி­யான மேலா­திக்க சிந்­தனை மற்றும் மேலா­திக்க போக்கு கார­ண­மா­கத்தான் பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­க­ளவர் என்ற மரத்தைச் சுற்றிப் படரும் கொடி­க­ளாக, தமிழ், முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ரை சிங்­கள ஆட்­சி­யா­ளர்கள் வர்­ணித்­தி­ருந்­தார்கள்.

ஒரு ஜன­நா­யக நாட்டில் தீர்­மா­னங்­களை மேற்­கொள்­வ­தற்கு பெரும்­பான்மை நிலைப்­பாடு ஓர் அளவு கோலாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டா­லும்­கூட, அர­சியல் தீர்­மா­னங்கள், அர­சியல் நடை­மு­றைகள் என்று வரும்­போது பெரும்­பான்மை இனத்­த­வரே இறுதித் தீர்­மா­னத்தை எடுக்க வல்­ல­வர்கள் என்ற நிலைப்­பாடு கணக்கில் எடுக்­கப்­ப­டு­வ­தில்லை. சிறு­பான்மை இன மக்கள் தங்­க­ளுக்கு என்ன தேவை என்­பதைத் தீர்­ம­னிக்கும் உரிமை ஜன­நா­ய­கத்தில் முதன்­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

ஜன­நா­யகம் கோலோச்­சு­கின்ற நாடு­களில் சிறு­பான்மை இன மக்­களின் சுய அர­சியல் தீர்­மா­னங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்­டி­ருப்­பதைக் காணலாம். அத்­துடன் அந்த ஜன­நா­யகப் பண்பு அங்கு உறு­தி­யாகக் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வ­தையும் முன்­னு­தா­ர­ண­மாகக் காண முடியும்.

இத்­த­கைய ஜன­நா­யகப் பண்பு இலங்­கையில் நடை­மு­றையில் வரு­வ­தற்கு பேரின அர­சி­யல்­வா­தி­களின் அர­சியல் ரீதி­யான மனப்பாங்கிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். நாங்களே பெரும்பான்மை இனத்தவர். எனவே நாங்கள் சொல்வதையே ஏனைய சமூகத்தினர் கேட்டு நடக்க வேண்டும். தங்களுக்கான உரிமைகள் என எதனையும் அவர்கள் தாங்களாக விரும்பிக் கேட்பது
கொடுக்கப்படமாட்டாது.

அவ்வாறு அவர்கள் கேட்கவும் கூடாது, என்ற போக்கில் செயற்படுவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது.
ஐ.நா. மன்றத்திலும்சரி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலும்சரி தீர்மானங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றலாம். அந்தத் தீர்மானங்களின் ஊடாக அரசியல் பொருளாதார ரீதியாக அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம். ஆனால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். நியாயமான நிலைப்பாட்டின் அடிப்படையில் ஏனைய சமூகத்தினர் மதிக்கப்பட வேண்டும், அவர்களின் அரசியல் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற ஜனநாயக ரீதியான தெளிந்த சிந்தனையோடும், விட்டுக்கொடுப்போடும் செயற்பட முன்வந்தால்தான் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

மனமுண்டானால் இடமுண்டு என்று சொல்வார்கள். இலங்கையைப் பொறுத்தளவில் பேரின மக்கள் மனங்களிலும் அதேபோன்று, பேரினவாதிகள், பேரின அரசியல்வாதிகள் ஆகியோரின் மனங்களில் அரசியல் ரீதியான மனப்பாங்கில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அந்த மாற்றங்களின் ஊடாகத்தான் இழுபறி நிலையில் உள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வுகளைக் காண முடியும்.

மனமாற்றம் நிகழாத நிலையில், வெளி அழுத்தங்களைப் பிரயோகித்து பிர்சினைகளுக்குத் தீர்வு காண்பதென்பது, தண்ணீர் குடிக்க விரும்பாத குதிரையை வலிந்து தண்ணீர்த் தொட்டிக்குக் கொண்டு செல்லும் கதையாகவே முடியும். பிரச்சினைகளுக்குத் தீர்வு நெருங்கிவிட்டது அல்லது விரைவில் தீர்வுகளைக் கண்டுவிடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தாலும், அது கானல் நீராக, தூரத்தையும் காலத்தையும் இழுத்தடிக்கவே செய்யும்.

No comments:

Post a Comment