வவுனியா ஜக்சனிடம் 100 கோடி கேட்டது யாரென்ற விடயம் அம்பலம்!!!!
இளம் விஞ்ஞானி ஜக்சனிடம் கப்பம் கோரியோர் தொடர்பானதகவல் அம்பலத்திற்கு வந்துள்ளது.
கடந்த சில தினங்களாக பல ஊடகங்களில் பேசப்பட்ட இளம் விஞ்ஞானி ஜக்சன் தற்போது சிக்கலில் மாட்டுப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுவரை காலமும் மறைமுகமாக கொலை கொள்ளைகளில் ஈடுபட்ட ஆயுதக்கும்பலை சேர்ந்தவர்களின் அடாவடி தற்போது கட்டுமீறியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் கூட்டத்தை சேர்ந்த இருவர் ஜக்சனின் வீட்டிற்கு சென்று ஜக்சனை மிரட்டியுள்ளனர். தமக்கு 100 கோடி ரூபா தராவிட்டால் கொன்று விடுவோமெனவும் மிரட்டியுள்ளனர். இதுபற்றி கருத்து தெரிவித்த சித்தார்த்தன் குறிப்பிட்ட இருவரும் தமது கட்சியிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்டவர்களென்று தெரிவித்துள்ளார்.
எனினும் ஜக்சனை மிரட்டிய இருவரும் கட்சியில் சித்தார்த்தனுக்கு அடுத்த பதவியிலுள்ளவர்களென அறியவருகின்றது. இந்த கொலைமிரட்டல் மற்றும் கப்பம் கோரி மிரட்டல் தொடர்பாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment