June 18, 2016

எம்மை ஏமாற்றி விடாதீர்கள்! - வலி. வடக்கு மக்கள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்!

கடந்த டிசம்பரில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,6 மாதங்களுக்குள் சகல மக்களையும் மீள்குடியேற்றுவேன் என்று கூறியிருந்தார்.
எனினும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமையுடன் அவர் கூறிய 6 மாதங்கள்நிறைவடையவுள்ள நிலையில், எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லைஎன்று ஜனாதிபதிக்கு ஞாபகப்படுத்தியுள்ளனர் வலிகாமம் வடக்கு மக்கள்.

நீங்கள் வழங்கிய உறுதிமொழியை நம்பி இருந்தோம். தற்போதும் நம்பிக்கையுடன்இருக்கின்றோம். அந்த நம்பிக்கைக்கு ஏமாற்றம் தந்துவிடாதீர்கள் என வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 26 வருடங்களுக்கு மேலாக ஏதிலிகளாகவுள்ள மக்கள்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்கூறியுள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்துக்காத்திருக்கும் 87 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

போர் நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்த நிலையிலும் எம்மை மீள்குடியமர்த்த அரசுதவறியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் உங்களுக்கு (ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனக்கு) வாக்களித்தோம். தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வைத் தருவீர்கள்என்று நம்பினோம். நீங்கள் ஜனாதிபதியாக வந்து ஒன்றரை வருடங்களாகியும்பெரியளவில் எந்த மாற்றத்ததையும் ஏற்படுத்தவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் 21ம் திகதி எமது நலன்புரி முகாமுக்கு வந்த நீங்கள், 6மாதங்களில் சகல மக்களையும் மீள்குடியேற்றுவேன் என்று கூறியிருந்தீர்கள். அதனைநம்பி இருந்தோம். தற்போதும் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். நீங்கள் அவ்வாறுகூறியிருந்த காலம் நிறைவடைவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளன.

நீங்கள் குறிப்பிட்ட 6 மாதங்கள் நிறைவடைந்ததும், மீள்குடியேற்றம் செய்யத்தவறின் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவேண்டிய நிலையைத் தவிர,எமக்கு வேறு வழியில்லை. தயவுசெய்து எம்மை அந்த நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்.

2013ம் ஆண்டு தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில் முன்பாக நடத்தப்பட்ட உணவுதவிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்களிடம், அப்போதையஎதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்ககூட தான் ஆட்சிக்கு வந்தால்அனைவரையும் மீள்குடியேற்றுவேன் என்று கூறியிருந்தார். அவர்கூட இன்னும்நடவடிக்கை எடுக்கவில்லை.

முகாம்களிலுள்ள எமது மக்களின் நிலை பரிதாபகரமானது. 15 அடி நீளம், 16 அடி அகலம்கொண்ட ஒரு கொட்டகைக்குள் 3 அல்லது 4 குடும்பங்கள் வசிக்க வேண்டியுள்ளது.மிருகங்கள் போல் வாழவேண்டிய நிலையே உள்ளது.

உறவினர் வீடுகளிலும் வாடகைவீடுகளிலும் இருந்து 4 வருடங்களுக்கு ஒருமுறை நாய்க்குட்டி காவுவதைப் போலஒவ்வொரு இடமாகவும் ஒவ்வொரு பாடசாலைகளுமாக மாறி எமது நிலை காட்டு வாசிகளின்நிலைக்கு மாறியுள்ளது.

சொந்த இடத்தில் வாழ விடுங்கள் என்றே நாங்கள் உங்களிடம் கேட்கிறோம். எமதுநிலையைக் கருத்தில்கொண்டு முற்றுமுழுதாக மீள்குடியேற்றத்தைச் செய்வீர்கள்என்று நம்புகின்றோம் - என்றுள்ளது.

No comments:

Post a Comment