ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சீனா தொடர்பான உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
சீனாவுடன் நெருங்கிய, தொடர்பைப் பேணுவதன் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன என்பது தொடர்பாக அவர்கள் இருவரும் தெளிவான நிலையில் உள்ளனர்.
இவ்வாறு, கடந்த வாரம் ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்கச் செயலாளர் றிச்சர்ட் ஆர்மிரேஜ்.
அரசியல் மற்றும் வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும், ஆலோசனைகளை வழங்கும் அமைப்பு ஒன்றை தற்போது நடத்தி வரும். ஆர்மிரேஜ், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இரண்டாவது தடவையாக இலங்கை வந்திருந்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் மீண்டும் கொழும்பு வந்தபோது தான் அவர் மேற்படி கருத்தை வெளியிட்டிருந்தார்.
அவர் கொழும்பு வந்திருந்த போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தனையும் சந்தித்துப் பேசியிருந்தார்.
2001ம் ஆண்டு ஐ.தே.க. ஆட்சி ஏற்பட்ட காலகட்டத்தில் தான் இவர், உதவி இராஜாங்கச் செயலராக, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷினால் நியமிக்கப்பட்டார்.
2005 வரை இவர் இந்தப் பதவியில் இருந்தார்.இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் உச்சத்தில் இருந்த காலகட்டம் என்று, அவர் 2001 தொடக்கம் 2005 வரையான காலப்பகுதியைக் குறிப்பிட்டார். அதில் பெரும்பாலான பகுதி ஐ.தே.க. ஆட்சிக்காலமாகும்.
அந்தக் காலகட்டத்தில் தான், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சர்வதேச வலைப்பின்னலை, அமெரிக்காவுடன் சேர்ந்து, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் உருவாக்கியிருந்தது.விடுதலைப் புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட புலனாய்வு வலையமைப்பும், புலிகளைப் பயங்கரவாதிகளாகப் பட்டியலிட எடுத்த நடவடிக்கைகளும் தான், மஹிந்த ராஜபக்ச அரசாங்கம், போரை முடிவுக்குக் கொண்டு வர உதவின.
அண்மையில், மஹிந்த ராஜபக் ஷவுக்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எழுதியிருந்த 20 பக்க கடிதம் ஒன்றில், இதுபற்றி விரிவாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்காக அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளின் மூலகர்த்தாக்களில் றிச்சர்ட் ஆர்மிரேஜும் ஒருவர்.
இவர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து வெளியேறிய பின்னரும் கூட, மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார். அவ்வப்போது, இங்கு வந்து செல்லும் வழக்கத்தையும் கொண்டிருக்கிறார்.
இப்போதைய அவரது வருகைக்கான காரணங்கள் பற்றிய கேள்விகள் பல இருந்தாலும், தனது பயணம் வர்த்தக நோக்கிலானது அல்ல என்று மட்டும் தெளிவாகக் கூறியிருக்கிறார்.அவரது வருகையின் நோக்கம், எவ்வாறானதாக இருந்தாலும், சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவு தொடர்பாக அவர் வெளிப்படுத்திய கருத்தே இந்தப் பத்திக்கு முக்கியமானது.
அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளின் செல்வாக்குக்கு உட்பட்ட ஒரு நாடாக இப்போது இலங்கை மாறியிருக்கும் சூழலில், இலங்கை எந்தப் பக்கம் சாய்கிறது? என்ற கேள்வி அவ்வப்போது பலருக்கும் எழுந்து கொண்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் பக்கம் சார்வது போலவும், இன்னொரு கட்டத்தில் இந்தியா பக்கம் சார்வது போலவும், மற்றொரு கட்டத்தில் சீனா பக்கம் சார்வது போலவும், இன்னொரு கட்டத்தில் ஜப்பானின் பக்கம் சார்வது போலவும் ஒருவித தளம்பல் நிலை காணப்படுகிறது.
மேற்படி நான்கு நாடுகளும், இலங்கை மீது செல்வாக்குச் செலுத்த முற்படுபவை. ஆனாலும், இவற்றில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகியவை தற்போது ஒரு அணியாகவும், சீனா மற்றொரு அணியாகவும் இருக்கிறது.முன்னைய மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் சீனாவின் பக்கம் அதிகம் சார்ந்து நின்றது. மேற்குலகத்துடனும், இந்தியாவுடனும் சற்று விலகி நின்றது. மஹிந்த அரசாங்கம் தானாகவே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவே ஆர்மிரேஜ் இப்போது கூறியிருக்கிறார்.
எவ்வாறாயினும், ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், சீனாவின் பக்கம் நிற்கப் போகிறதா- மேற்குலக- இந்திய கூட்டின் பக்கம் நிற்கப் போகிறதா என்ற கேள்வி பெரும்பாலும் எழவேயில்லை.
ஏனென்றால், சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்காக, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் மேற்குலக - இந்திய- கூட்டு அதிக பங்களிப்பை செய்திருந்தது.
அந்த எண்ணத்தை மெய்ப்பிக்கும் வகையில், சீனாவிடம் இருந்து தற்போதைய அரசாங்கம் சற்று விலகியதுடன், சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்களையும் முடக்கிப் போட்டது. குறுகிய காலத்துக்குள் சீனாவிடம் இருந்து விலகியது தவறு என்பதை உணர்ந்து கொண்ட இலங்கை, அண்மையில் சீனாவின் திட்டங்களுக்கும், அதனுடனான உறவுகளுக்கும் கூடுதல் முக்கியத்துவத்தை அளித்து வருகிறது.
அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகள், பழைய உறவுகள் மீண்டும் துளிர்ப்பதற்கான சாத்தியங்களை உருவாக்கியது. இது இந்தியாவுக்கு சந்தேகங்களை ஏற்படுத்தவும் செய்தது.
அதேவேளை, அண்மையில் ஜி- -7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பானுக்கு அழைக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, அதிகளவு உதவிகளை வழங்க ஜப்பான் முன்வந்திருக்கிறது.சீனாவும், ஜப்பானும் போட்டி நாடுகள், இந்தியப் பெருங்கடல் வழியான தமது கப்பல் போக்குவரத்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாடுகள்.
அதற்காகவே சீனா இந்தியப் பெருங்கடல் கப்பல் பாதைகளின் மீது ஆதிக்கம் செலுத்த முனைகிறது.
அதேவேளை இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் இணைந்து இந்தியப் பெருங்கடல் கப்பல் பாதைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜப்பான் விரும்புகிறது.சீனாவும் ஜப்பானும் இப்போது இலங்கைக்குப் போட்டி போட்டு உதவ முன்வந்திருக்கின்ற சூழல், இலங்கையின் மீதான அக்கறை அல்ல.
அமெரிக்காவின் இலங்கையுடனான இருதரப்பு உறவுகள், இந்தியப் பெருங்கடலில் தமது தேவைப்பாடுகளை நிறைவேற்றும் என்பதற்காகவே இந்த ஏட்டிக்குப் போட்டியான உதவிகள் அமைந்திருக்கின்றன.
அதேவேளை ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனா சென்று திரும்பிய நிலையில், கடந்தவாரம், அமைச்சரும், ஐ.தே.க. பொதுச்செயலருமான கபீர் காசிம், சீனாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
அவர் இந்தப் பயணத்தின் போது, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அனைத்துலக திணைக்களத் தலைவர் சோங் தாவோவுடன் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.
ஏற்கனவே ஐ.தே.க. தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, சோங் தாவோவுடன் கடந்தமாதம் பேச்சுக்களை நடத்தினார். இப்போது ஐ.தே.க.வின் பொதுச்செயலர் பேச்சு நடத்தியிருக்கிறார்.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஐ.தே.க.வுடன் அவ்வளவாக தொடர்புகளையோ உறவுகளையோ வைத்திருக்கவில்லை.
சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் சீனாவில் ஆட்சியை நடத்துகிறது. ஆளும்கட்சியையே எப்போதும் தனது கைக்குள் வைத்திருப்பது தான் சீன அரசின் கோட்பாடு. எனவே, எப்போதுமே எதிர்க்கட்சியுடனான உறவுகளை சீனா அதிகம் வைத்துக் கொள்வதில்லை.
ஆனால், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இரண்டு பிரதான கட்சிகளும் அரசாங்கத்தில் இணைந்து கொண்டதும், எந்தக் கட்சியுடன் உறவை வைத்துக் கொள்வது என்ற சிக்கல் சீனாவுக்கு ஏற்பட்டது.இன்னொரு பக்கத்தில் சீனாவுடனான உறவுகளில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகி நின்றதும் அதற்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
அத்தகைய கட்டத்தில் தான், மஹிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியின் பக்கம் சாயலாமா? என்று கூட சீனா யோசித்தது.அந்த நிலைமையை உணர்ந்து அரசாங்கம், ஐ.தே.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கருணாசேன கொடிதுவக்குவை, சீனாவுக்கான தூதுவராக நியமித்தது,இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ள நிலையில், ஐ.தே.க. சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவுகளை வலுப்படுத்த ஆரம்பித்துள்ளது.
மஹிந்த ராஜபக்சவை, மீளத் தலையெடுக்காதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக மாத்திரமன்றி, பிராந்திய, சர்வதேச சக்திகளுடனான உறவுகளைச் சமப்படுத்துவதற்காகவும் கூட, ஐ.தே.க. இந்த நகர்வை முன்னெடுத்திருக்கிறது.அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டே, சீனாவுடனான உறவுகளையும் பலப்படுத்திக் கொண்டு வருகிறது இலங்கை.
இது ஒரு கத்தியில் நடக்கின்ற சவாலான காரியம் தான்.சீனாவுடனான உறவுகளை எந்தளவுக்கு வைத்துக் கொண்டால் நன்மை தரும், எந்தளவுக்கு தீமை தரும் என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் நன்று அறிந்து வைத்துள்ளனர் என்ற றிச்சர்ட் ஆர்மிரேஜின் கருத்து இங்கு முக்கியமானது.
அதாவது, சீனாவுடனான உறவுகளுக்கு அமெரிக்கா ஒரு எல்லைக் கோட்டை வைத்திருக்கிறது, அந்த எல்லைக்கோட்டை அவர்கள் தாண்ட மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் அதற்கு இருக்கிறது என்பதைத் தான் அவர் நாசூக்காக வெளிப்படுத்தியிருக்கிறார்.

No comments:
Post a Comment