June 5, 2016

முதலமைச்சருக்கு கடற்படை முகாமில் விருந்தோம்பல் ஆபத்தானதா? சிறப்பு ஆய்வு!

திருகோணமலை கடற்படைத் தளத்தில் கடந்த வாரம் மதியபோசன விருந்தில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கலந்து கொண்டார்.
விருந்தை உண்ட முதல்வர் நசீரும் நல்ல விருந்து, நல்ல கவனிப்பு என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரன், இலங்கையின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடன் திருகோணமலை சென்றிருந்தார்.

அமைச்சர் சமரவிக்ரமவின் அழைப்பின் பெயரில் தான் கிழக்கு முதல்வர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

அங்கு பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கு கொண்ட அவர்களுக்கு திருகோணமலை கடற்படைத் தலைமையகத்தில் மதிய போசன விருந்து அளிக்கப்பட்டது.

இந்த விருந்துபசாரத்துக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டும் கலந்து கொண்டு கடற்படையினர் வழங்கிய விருந்தோம்பலில் உணவு உண்டார்.

கடந்த மாதம் 20ம் திகதி சம்பூரில் நடந்த நிகழ்வில் கடற்படை அதிகாரியை இழிவுபடுத்தியதற்காக, கிழக்கு மாகாண முதலமைச்சரை தமது முகாம்களுக்குள் அனுமதிப்பதில்லை என்றும், அவர் பங்கேற்கும் நிகழ்வுகளைப் புறக்கணிப்பது என்றும் இலங்கையின் முப்படைகளும் கடந்த 26ம் திகதி முடிவெடுத்திருந்தன.

எனினும், கடந்த மாதம் 30ம் திகதி இந்த முடிவுகளை முப்படைகளும் மாற்றியிருப்பதாக அறிவித்திருந்த நிலையிலேயே கடற்படையினர், கிழக்கு முதலமைச்சருக்கு விருந்து வழங்கியுள்ளார்கள்.

ஆபத்தான விருந்தோம்பல் வைபவம்

கிழக்கு முதல்வர் சிங்கள கடற்படை அதிகாரியை பகிரங்கமாக திட்டி அவமானப்படுத்தி விட்டார் என்று நாடு முழுவதும் ஒரு கசப்பு பதிந்துள்ளது. விசேடமாக கடற்படைக்கு பெருத்த அவமானம் என்று சிங்களப்படை கொதித்துக் கொண்டுள்ளது.

சிங்களப் படைகளைப் பொறுத்தமட்டில் சமயம், சந்தர்ப்பம் பார்த்து பழிவாங்கப் பழகி விட்ட படை. அந்த வகையில் மெல்லக் கொல்லக் கூடிய விஷம் உள்ள காலத்தில் தனது உணவுகள் மற்றும் விருந்தோம்பல் நிகழ்வுகளில் கிழக்கு முதல்வர் நசீர் அஹமட் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வடக்கு முதல்வரும் கிழக்கு முதல்வரும் உயர் ஆபத்தில் உள்ளவர்கள். வடக்கு முதல்வர் அரசியல் ரீதியாகவும் கிழக்கு முதல்வர் ஒரு பழிவாங்கலாகவும் கொண்ட உயிர் ஆபத்தில் உள்ளார்கள். அதனால் அவர்களின் பாதுகாப்பில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவையில் உள்ளார்கள்.

கடந்த காலங்களில் புலிகளின் பல உறுப்பினர்கள் படையினரால் மெல்லக் கொல்லும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக பல சம்பவங்கள் உள்ளன.

அந்த வகையில் புலிகளின் பெண்கள் அணித் தலைவி தமிழினியும் மெல்லக் கொல்லும் விஷம் கொடுத்துதான் விடுதலை செய்யப்பட்டார் என்ற தகவலும் உள்ளது. தமிழினி படையினரால் விடுதலை செய்யப்பட்டு சில காலங்களில் மரணமடைந்தார்.

அதே போன்று வடக்கில் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசெப் அவர்கள் படை முகாம் ஒன்றில் சிற்றுண்டியை உண்ட பின்பு நோய்க்கு உள்ளானார் என்றும், சிங்கப்பூரில் வைத்தியம் பார்த்தார் என்றும், தற்போது முன்னர் போன்று அவரால் இயங்க முடியாத கதையும் உள்ளது.

அதாவது உண்ணக் கூடிய உணவுகள், குடிக்கும் பானங்கள் மற்றும் சகல உணவுகளிலும் ஒரு இலக்கு செய்யப்பட்டு 3 மாதம் 6 மாதம் குறி வைக்கப்பட்டு அந்த உணவை உண்டவர் அல்லது பானத்தை குடித்தவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைய மிக அதிக வாய்ப்புள்ளது.

இப்படியாக குறி வைக்கப்பட்டு விஷம் கொடுக்கப்பட்டவர்களுக்கு ஈரல் மற்றும் கிட்னி தான் நேரடியாகப் பாதிக்கப்படும் என நெருக்கமான வைத்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதனால் கிழக்கு முதல்வருக்கு கடற்படைத் தளத்தின் பகல் போசனம் ஒரு வெள்ளோட்டமாகவும் இருக்கலாம்.

ஒரு யூகத்தின் அடிப்டையில் அல்லது தற்போது விஷம் கொடுத்ததும் இருக்கலாம். அதனால் கிழக்கு முதல்வர் இலங்கைக்கு வெளியே சிங்கப்பூரில் ஒரு முழு உடல் பரிசோதனை செய்வது மிக நல்லது.

எதிர்வரும் காலங்களில் படைகளின் முகாம்கள் மற்றும் வைபவங்களில் வடக்கு கிழக்கு முதல்வர்கள் முற்று முழுதாக சகல உணவுகள் மற்றும் பானங்களை தவிர்ப்பது மிகவும் சிறப்பு.

எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இரண்டு முதல்வர்களும் எப்போதும் தம்முடன் நம்பிக்கையான ஒருவரை அமர்த்தி வைப்பது இன்னும் சிறப்பு. எக்காரணம் கொண்டும் படை மற்றும் பொது வைபவங்களில் மிகவும் கவனமாக கையாண்டால் நம் வாழ்க்கை நம் கையில் என்போம்.

வரும்முன் காப்பது புத்திசாலித்தனம்.

No comments:

Post a Comment