June 7, 2016

பரபரப்பான சூழ்நிலையில் சிறைச்சாலையில் மஹிந்த! வலுக்கும் சந்தேகங்கள்!

ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக, வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அநுர சேனாநாயக்கவை, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர்,

தனது ஆட்சிக் காலத்தில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் கொழும்பு நகரத்தில் பல சேவைகளை செய்த ஒருவர் என்பதனால், அவரை பார்ப்பதற்குச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களான நாமல் ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் தாஜுடீன் கொலையுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் அநுர சேனாநாயகவை மஹிந்த ராஜபக்ச சந்தித்துள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே தனது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளை அம்பலப் படுத்த வேண்டாம் என சட்டத்தரணிகள் ஊடாக மஹிந்த கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் அதனை நிராகரித்த அநுர சேனாநாயக்க, அரசாங்கத்தின் சாட்சியாளராக மாறப் போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment