தி.மு.க. தலைவர் கருணாநிதி வரும் 3ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) 93வது பிறந்த தினத்தைக் கொண்டாட உள்ளார்.
இதையொட்டி அவருடைய அன்றைய நிகழ்ச்சி நிரல் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன் பிரகாரம், அன்றைய தினம் காலை 7 மணியளவில் சென்னையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார் கருணாநிதி. தொடர்ச்சியாக, 7.15 மணியளவில் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.
அதன்பிறகு, 9 மணியளவில் அண்ணா அறிவாலயத்திற்கு செல்லும் கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. முக்கிய பிரமுகர்கள், தொண்டர்களின் வாழ்த்துகளையும் பெற உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.
இதையடுத்து, மாலை 6 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள வை.எம்.சி.ஏ. மைதானத்தில் பிறந்தநாள் விழாவிற்கான மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அதிலும் அவர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment