June 19, 2016

எகிப்தில் இருவருக்கு மரண தண்டனை! அல்ஜசீரா ஊடகம் கண்டனம்!

எகிப்தில் அரசு ரகசியங்களை கசிய விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அதிபர் மோர்சிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதே வழக்கில் மரண தண்டனை பெற்ற முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் 6 பேரின் தண்டனையும் உறுதி செய்யப்பட்டது. மேலும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை (25 ஆண்டுகள் சிறைவாசம்) விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆறு பேரில் அல் ஜஜூரா பத்திரிக்கையின் இரண்டு ஊழியர்களும் அடங்குவர். இதில், இப்ராகிம் ஹூலால் என்பவர் அல் ஜஜூரா ஊடகத்தின் முன்னாள் இயக்குநராக இருந்தவர். மற்றொருவர் எகிப்து நாட்டை சேர்ந்தவர் அல்ல. அப்செண்டியாவை சேர்ந்தவர். அங்கேயே விசாரணை நடத்தப்பட்டு தற்போது தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்கள் ஊழியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு அல் ஜாஜூரா செய்தி நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல் பல்வேறு சமூக அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பத்திரிக்கையாளர்களுக்கு மரண தண்டனை அளித்துள்ளது கருத்து சுதந்திரத்தின் மீது கேள்வி எழுப்பியுள்ளது என்று குற்றம்ச்சாட்டியுள்ளது. மேலும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதில் அரசியல் இருந்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment