ஸ்ரீலங்காவில் காணாமல் போனவர்கள் தொடர்பாக பதிவுசெய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் 3 ஆயிரம் முறைப்பாடுகள்
உண்மைக்கு புறம்பானவை என காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 1980 ஆம் ஆண்டு தொடக்கம் காணாமல் போனவர்கள் தொடர்பாக பதிவுசெய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளை உள்ளடக்கியே முன்னாள் நீதியரசர் பரணமக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறாயினும் ஸ்ரீலங்காவில் காணாமல் போனவர்கள் தொடர்பான சுயாதீன பணியகம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்றின் மூலம் ஸ்தாபிப்பதற்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட பரணகம் ஆணைக்குழு, கடந்த காலங்களில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாடுகளை ஸ்ரீலங்காவில் அமைக்கப்படவுள்ள சுயாதீன பணியகத்திடம் ஒப்படைக்கவுள்ளது.
இந்த நிலையிலே பரணகம இவ்வாறான தகவலை வெளியிட்டுள்ளார்.
பரணகமவின் இவ்வாறான கருத்து பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது என்பதுடன், ஆணைக்குழுவில் நம்பிக்கை வைத்து தமது முறைப்பாடுகளை பதிவுசெய்த மக்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறான பதிலை வழங்கப்போகிறது என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
பரணகம ஆணைக்கழுவில் தமக்கு நம்பிக்கை இல்லை என ஆரம்பத்தில் இருந்தே பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும் பரணகமவின் இவ்வாறான கருத்து ஏற்கனவே நம்பிக்கையற்றிருந்த மக்களுக்கு மேலும் நம்பிக்கையீனத்தை உருவாக்க உதவியாகவுள்ளது.
எனினும் காணாமல் போனவர்கள் தொடர்பான சுயாதீன பணியகம் ஸ்ரீலங்காவில் அமைப்பது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள், இவர்கள் தொடர்பாக பணியாற்றும் சிவில் அமைப்புக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட சட்டத்தரணிகள் ஆகியோரிடம் கலந்துரையாடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கபட்டுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு தரப்பினர் சுயாதீன பணியகம் தொடர்பாக தமது விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment