வடமாகாணத்தில் மிகவும் வறுமையில் வாடும் இரண்டு குடும்பங்களின் நான்கு மாணவர்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
நான்கு மாணவர்களுக்கான உதவிகளை வெளிநாட்டில் இருந்து பெற்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வழங்கி வைத்துள்ளார். நேற்று ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் வைத்தே, இரண்டு மாணவிகளுக்கு மிதிவண்டிகளும் நான்கு மாணவர்களுக்கும் புத்தகப்பைகள், மூடியகாலணிகள் , எழுதுகருவிகள், கணிகருவிப்பெட்டிகள், சீருடைகள், குறிப்புநூல்கள் என கற்றலுக்கான முழுமையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மாணவர்களுக்கான உதவிகளை சுவிற்சலாந்து நாட்டில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர் வரதராசன் நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment