June 26, 2016

ஆனையிறவில் அமைகிறது அனைத்துலக துடுப்பாட்ட மைதானம்!

ஆனையிறவுப் பகுதியில், அனைத்துலக துடுப்பாட்ட மைதானம் ஒன்றை கட்டுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.


வடக்கின் விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பாக,  சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

“வடக்கில் அனைத்துலகத் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலம், ஏ-9 நெடுஞ்சாலைக்கும், ஏ-32 நெடுஞ்சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது,

அதேவேளை,வட மாகாண இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், கிளிநொச்சியில், நீச்சல் தடாகத்துடன் கூடிய விளையாட்டரங்கு ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளுக்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் முடிவடையும். இங்கு தான் அடுத்த தேசிய விளையாட்டு விழா நடத்தப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment