புத்தளம் பாலாவியில், புதிய உள்நாட்டு விமான நிலையம் ஒன்றை அமைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த விமான நிலையக் கட்டுமானப் பணிகளுக்கு 750 மில்லியன் ரூபா செலவிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய விமான நிலைய கட்டுமானப் பணிகளுக்காக 26 ஹெக்ரெயர் நிலம் சுவீகரிக்கப்படவுள்ளது.
உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் கீழ் இந்த புதிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.
முன்னதாக மட்டக்களப்பில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் புத்தளம், பாலாவியில் சிறியதொரு ஓடுபாதையுடன் கூடிய விமான தளம் அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் சிறிலங்கா விமானப்படை தற்போது தளமிட்டுள்ளது.
அந்த ஓடுபாதையைப் புனரமைத்தே புதிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.

No comments:
Post a Comment