June 6, 2016

நான் விடுதலைப் புலிகளின் அங்கம்- வைகோ!

மதுரையில் நடந்த மனித உரிமை கருத்தரங்கில் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசியதாவது:


கடந்த 1998ல் ஜெனிவா மனித உரிமை கமிஷனில், இலங்கை தமிழர் பிரச்னை குறித்து தெரிவித்தேன். மனித உரிமைக்காக ஜெர்மனியில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்; இன்று மனித உரிமைக்காக அந்நாடு போராடுகிறது.

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது 10 மணிநேரத்தில் அங்கு சென்று அக்கொடுமையை எதிர்த்து குரல் கொடுத்தனர். ஆனால் இலங்கை சம்பவத்தில் இது போல நடக்கவில்லை. தமிழகத்தில் அரசு மருத்துவமனைக்கு செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். தனியார் மருத்துவமனைக்கு சென்றால் சொத்துக்களை விற்க வேண்டியுள்ளது. பூடான் போன்ற நாடுகளில் தனியார் மருத்துவமனைகள் இல்லை. அங்கு அனைவருக்கும் உயர் சிகிச்சை கிடைக்கிறது. தமிழகத்திலும் அந்த நிலை வேண்டும்.

‘நான் விடுதலைப் புலிகளின் அங்கம்’ எனக் கூறி வேறு நாடுகளுக்கு செல்வதை தடுத்துள்ளனர். அழிந்து வரும் இனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறேன். ஆனால் அதற்காக என்னை பார்லிமென்ட்க்கு அனுப்ப மக்கள் தயாராக இல்லை; பரவாயில்லை. எனது குரல் என்றும் ஒலிக்கும்.

இவ்வாறு பேசினார்.

No comments:

Post a Comment