June 28, 2016

வவுனியாவுக்கு வந்த வில்லங்கம்...!!

 இலங்கை ஒன்பது மாகாணங்களையும், 25 மாவட்டங்களையும், 13 பல்கலைக் கழகங்களையும் 65 ஆயிரம் சதுர Km பரப்பளவையும் கொண்ட
ஒரு அழகிய சிறிய தீவு.

ஆனாலும் கல்வியில் தனக்கென்றே ஒரு தனி இடத்தை பேணிவருகிறது.
வவுனியாவிற்கு வர இருந்த 14 ஆவதாவது பல்கலைக்கழகமாக "வவுனியா பல்கலைக்கழகத்தினை" (வவுனியா பம்பைமடுவில்)
சிலர் வரவிடாது தடுக்கிறாங்களாம்....!!
வவுனியா வளர்ந்து கொண்டு போற வேகத்தில,வவுனியா யூனிவர்சிற்றி வந்திட்டா பிறகு வவுனியாவை பிடிக்க ஏலாம போடுமாம்,
அதனால, கொஞ்சப் பேர் சேர்ந்து, இப்படியொரு சதி வேலையில் இறங்கீட்டினமாம்.
அடக் கடவுளே...!! சாமி வரம் குடுத்தாலும் பூசாரிமார் விடமாட்டினம் போல...??
இப்ப கிட்டடியில கூட, வவுனியா தாண்டிக்குளத்துக்கு வர இருந்த பொருளாதார மத்திய நிலையத்தை, தாண்டிக்குளத்துக்கு போடவிடாம தடுக்கினமாம்.....!!
இது மாதிரித்தான் வவுனியா யூனிவர்சிற்றீட நிலையும்....!!!
நீங்களே சொல்லுங்கங்கப்பா, வவுனியாக்கு யூனிவர்சிற்றி வாறதை நீங்கள் விரும்புறீங்களா? இல்லையா?
வவுனியாக்கு யூனிவர்சிற்றியை கொண்டுவாறதுக்கு உங்கட ஐடியா என்ன???
த.பிரதாபன்.



No comments:

Post a Comment