June 20, 2016

சென்னை நீதிமன்றத்தில் நாளை போர்க்களத்தில் ஒரு பூ!

போர்க்களத்தில் ஒரு பூ என்ற விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளர் இசைப்பிரியாவை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை காட்சிப்படுத்த தலையிட வேண்டும் என்று மனு நாளை விசாரணைக்கு வருகிறது.


சென்னை மேல்நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணை செய்யப்படவுள்ளது.

கே. கணேசனின் தயாரிப்பிலான இந்த திரைப்படத்தில் இசைப்பிரியா இலங்கையின் இறுதிப்போரின்போது பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவதாக காட்டப்படுகிறது.

இந்தநிலையில் மத்திய திரைப்பட சான்று சபை அதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது.

எனினும் இறுதிப்போரின்போது என்ன நடந்தது என்பதை காட்ட வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை தடுப்பது சுதந்திர ஊடகதர்மத்தை மீறும் செயல் என்று மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment