மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அரசியல் இலாபத்தை பெறுவதற்கான நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஜனநாயக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில் பிரபாகரன் இறக்கவில்லை என விஜயகலா மகேஸ்வரன் ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளார். இது பற்றி எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டக்ளஸ்,
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணித்தது அனைவரும் அறிந்த விடயமே எனக் குறிப்பிட்ட அவர், மேலும் போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கழிந்துள்ள நிலையில் பிரபாகரன் இன்னும் இறக்கவில்லை, அவ்வாறு மரணித்திருந்தால் மரண சான்றிதழ் ஏன் இன்னும் வழங்கவில்லை? என விஜயகலா கேள்வி கேட்பது தனக்கான அரசியல் இலாபத்தை தேடவே என கூறினார்.
விஜயகலாவின் கணவர் மகேஸ்வரனை கொலை செய்தமை தொடர்பான DNA ஆதாரம் கிடைக்கப் பெற்றும், குற்றவாளி யார் என்ற விடயம் தெரிந்த பின்னரும் கூட அது பற்றி எந்த ஒரு நடவடிக்கைகளும் விஜயகலா ஏன் முன்னெடுக்கவில்லை என இதன்போது கேள்வி டக்ளஸ் எழுப்பினார்.
ஆதாரம் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதவர் பிரபாகரன் பற்றி கருத்து தெரிவிப்பது நகைப்புக்குரியவிடயம் என சுட்டிக்காட்டினார்.
மேலும் பிரபாகரன் மரணித்தமை யாவரும் அறிந்ததே, விஜயகலாவின் இந்த பொய்யான தகவல்களையும் ஊடகங்களிடம் கருத்து தெரிவிப்பதையும் தம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்தார்.

No comments:
Post a Comment