May 22, 2016

திருகோணமலை உல்பத்தக்குளம் உடைப்பெடுப்பு!

திருகோணமலை, தம்பலகாமம் மேற்குப் பகுதியிலுள்ள உல்பத்தக்குளம் உடைப்பெடுத்துள்ளதால் அருகிலுள்ள புலியூற்றுக்குளத்தில் நீரைத் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

உல்பத்தக்குளம் இன்று காலை உடைப்பெடுத்துள்ளது.
200 ஏக்கர் கன அடி நீரைக் கொள்ளக்கூடியதாக இக்குளத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீர் முற்றாக வெளியேறியுள்ளது.
இந்நிலையில், இக்குளத்திலிருந்து வெளியேறுகின்ற நீர் அருகிலுள்ள புலியூற்றுக்குளத்தில் தேக்கி வைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குளத்திலும் தண்ணீர் நிறையுமாயின் அருகிலுள்ள ஜெயபுரம், பத்தினிபுரம் ஆகிய கிராமங்கள் பாதிக்கப்படலாம்.
எனவே, இந்தக் கிராமங்களில் வாழும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸாரும் பிரதேச செயலக அதிகாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பிரதேச செயலாளர் திருமதி ஜெயா ஸ்ரீபதி நேரில் சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் அவசர நிலைமை ஏற்பட்டால் அதனைச் சமாளிக்க பாதுகாப்பு படையினரையும் தயார் நிலையில் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment