இலங்கை மக்கள் தற்போது மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் நாயோவா நகரில் நடைபெற்று வரும் ஜீ.7 நாடுகளின் மாநாட்டில் இன்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
ஜீ.7 நாடுகளின் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமை குறித்து ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவுக்கு கௌரவமான நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சுமார் 30 வருட காலமாக காணப்பட்ட பயங்கரவாதம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி நிலைமைக்கு சென்றது.
புரட்சிக்கரமான மாற்றத்தின் மூலம் நேரடி அபிவிருத்தியுடன் கூடிய சூழல் மற்றும் பல வேறுபாடுகளை கொண்ட சமூகத்தில் நல்லிணக்கத்திற்கான வழியை உருவாக்க எமது அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.
தற்போது மக்கள் சுதந்திரமாக உள்ளனர்.
அவர்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கின்றனர்.நாங்கள் ஏற்படுத்திய மாற்றத்தை ஜீ.7 நாடுகள் எப்படி வரவேற்றுள்ளன என்பது எனக்கு தெரியும்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்த தேர்தல்களில் மக்கள் இந்த மாற்றத்தை கொண்டு வந்தனர்.நாட்டில் இரண்டு ஜனநாயக அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைந்து எனது தலைமையின் கீழ், தேசிய ஐக்கிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம்.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களின் பலவற்றை ஜனநாயக அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment