May 27, 2016

உலகில் தமிழ் தாய்மார்கள் மட்டுமே தாலியை விற்றாவது பிள்ளைகளை படிப்பிக்கின்றார்கள் -ஆ.நடராஜா!

இந்த உலகில் தமிழ் தாய்மார்கள் மட்டுமே தங்களுடைய தாலியை விற்றாவது பிள்ளைகளை படிப்பிக்கின்றார்கள்
இது வேறு எந்த தாய்மார்களிடமும் கிடையாது தங்களுடைய தாலி என்று கூட பாராது அதனை விற்று பிள்ளைகளை படிப்பிப்பார்கள் என யாழ் இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜா தெரிவித்துள்ளார்.


வியாழக்கிழமை கிளிநொச்சி கனகபுரம் முதலாம் வீதியில் சிவபூமி மனவிருத்தி பாடசாலை திறப்பு விழாவில் அதிதீதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்த மண் ஒரு புண்ணிய பூமி, இலக்கிய பூமி,பண்பான பூமி,பணிவான பூமி,அறிவு படைத்த பூமி இப்படிதான் நாம் கூறுவதுண்டு. இது எங்கள் ஆழ்ந்த மணதில் இருந்து வரும் வார்த்தைகள்.  எனக்குறிப்பிட்ட அவர் இந்த சிவபூமி மனவிருத்தி பாடசாலை இந்த சமூகத்திற்கு ஒரு முக்கிய தேவையான ஒன்று இதற்காக நாம் எம்மாலான எந்த உதவியையை செய்ய தயாராக உள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.


யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இயங்கி வருகின்ற சிவபூமி மனவிருத்தி பாடசாலை தற்போது அதன் கிளையை கிளிநொச்சி கனகபுரத்தில் ஆரம்பித்துள்ளது. யுத்தத்தின் பாதிப்புக்களை அதிகம் சுமந்த வன்னியில்  பெரும்பாலான சிறுவர்கள் அதிகளவு உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த பாடசாலையின் ஆரம்பம் ஒரு வரப்பிரசாதமாகவே காணப்படுகிறது.


சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவரிகள், ஆன்மீகசுடர் ரிஷp தொண்டுநாத சுவாமிகள், கணேசானந்த சுவாமிகள், பிரம்சாரி ஜாக்கிரத சைத்தான்யா சுவாமிகள், பிரம்சாரி சிவேந்திர சைத்தான்யா சுவாமிகள்,வணபிதா யோசுவா அடிகளார், மற்றும் யாழ் இந்திய துணைதூதுவர் ஆ.நடராஜன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.








No comments:

Post a Comment