காணாமல் போனோர் தொடர்பான அலுவலகங்களை நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம்
பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாடவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் மூலம் சர்வதேசத்திடம் வழங்கிய உறுதிமொழியை இலங்கை அரசு மீறி இருக்கிறது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.
தென்ஆசிய பிராந்திய பணிப்பாளர் ப்ரட் அடம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மாநாட்டில், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் உள்ளிட்ட நீதி வழங்கும் பொறிமுறைகள் தொடர்பில், தேசிய மட்டத்திலான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என இலங்கை உறுதி வழங்கி இருந்தது.
எனினும் அவ்வாறான கலந்துரையாடல்கள் எவையும் நடத்தப்படாமலேயே கடந்த 24ஆம் திகதி காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment