May 21, 2016

தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் - டெனி டேவிஸ்!

தமிழர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் டெனி டேவிஸ் தெரிவித்துள்ளார்.


தமிழர்கள் உள்ளிட்ட இலங்கை வாழ் சிறுபானமை இனத்தவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு வருவதாகவே உணர்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் தலைவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


தற்போது இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மெய்யான மாற்றங்களை ஏற்படுத்தும் வரையில் அமெரிக்கா இராணுவ உதவிகள் உள்ளிட்ட சில விடயங்களை தளர்வினை பின்பற்றக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாக யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் சமாதானம் இதுவரையில் வென்றெடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment