May 30, 2016

தமிழினப் படுகொலை நினைவேந்தல்: சென்னை மெரீனாவில் திரண்டு தமிழ்மக்கள் அஞ்சலி!

தமிழ் இனப்படுகொலைக்கான ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை 29.05.2016 மாலை சென்னை மெரினா நடைபெற்றது.


இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், தமிழ் உணர்வாளர்களும், மாணவர்களும், தோழமை இயக்கங்கள் மற்றும் கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

மதிமுக பொது செயலாளர் வைகோ, கவிஞர் காசி ஆனந்தன், ஓவியர் வீரசந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இனப்படுகொலையை மறக்க மாட்டோம், ஈழம் ஒன்றே தீர்வாகும் என்று முழக்கங்கள் எழுப்பினர். அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நினைவேந்தினர்.

இந்த நிகழ்வை மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்து இருந்தது.

வங்க தேசக் கலைஞர் சுசாந்தா தாசின் போருக்கு எதிரான நாடகமும், முரசு கலைக்குழுவின் கலைநிகழ்சி நடை பெற்றது.

ஈழப் போராட்டம் குறித்த ஒரு நாடகத்தினை மாணவர்கள் நடத்தினர்.
தமிழகத்தின் பல ஓவியர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
















No comments:

Post a Comment