முல்லைத்தீவு – கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்த திஜீவன் மீது முள்ளியவளை பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியமை
தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக திஜீவனின் தயார் இந்திராணி தெரிவித்தார்.
வீட்டில் தனியாக இருந்த 27 வயதான விவேகானந்த திஜீவன் மீது முள்ளியவளை பொலிஸார் நேற்று சனிக்கிழமை மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக இந்திராணி செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.
காரணகள் இன்றி இரண்டு தடவைகள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கும் தாயார், காயங்கள் ஏற்படாவிட்டாலும் எதற்காக பொலிஸார் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது தனது மகன் முள்ளியவளை பொலிஸ்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் கடந்த நிலையிலும் தம்மை தமது கிராமத்தில் மீள்குடியமர்த்தவில்லை என கூறிய இந்திராணி, தற்போது மாதிரி கிராமத்தில் தொழில்நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment