May 29, 2016

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணையே நடைபெறும் – பிரதமர் ரணில்!

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணையே நடைபெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


அண்மையில் படையதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அடிப்படையில் இலங்கையில் உண்மை ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்கள் தொடர்பில் தனிப்பட்ட ரீதியிலா அல்லது கூட்டு அடிப்படையிலா படையதிகாரிகள் தண்டிக்கப்படுவர் என, இராணுவத் தளபதி கிருஸாந்த டி சில்வா பிரதமரிடம் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பிரதமர் நேரடியாக பதில் எதனையும் அளிக்கவில்லை என்பத குறிப்பிடத்தக்கது.

விசாரணைப் பொறிமுறைமை குறித்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெளிவுபடுத்துவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறனெனினும் விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச பங்களிப்பு இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment