கடந்த வாரம் மன்னாரில் நிலவிய சீரற்ற காலநிலையால் மிகவும் பாதிப்படைந்த பேசாலை இழுவைப் படகு மீனவர்களுக்கு
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரின் வேண்டுகோளுக்கிணங்க மன்னார் ஆயர் இல்லம் பாதிப்படைந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்குடன் பண உதவிகள் வழங்கியுள்ளது.
கடந்த வாரம் மன்னாரில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதுவும் பேசாலை பகுதி இழுவைப் படகு மீனவர்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தனர்.
மன்னார் பகுதியில் சீரற்ற காலநிலை தாண்டவமாடியபோது பேசாலை பகுதியிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட இழுவைப்படகுகள் பேசாலை பகுதியிலுள்ள கடலில் நங்கூரமிடப்பட்டு இருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.05.2016) இரவு இப்பகுதியில் ஏற்பட்ட மினி சூறாவளியின் காரணமாக கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த இழுவைப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்ட நிலையில் முப்பது படகுகள் சேதங்களுக்கு உள்ளாகியதுடன் பதினேழு படகுகள் கடலில் முற்றாக மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் இவ் படகுகளின் உரிமையாளர்கள் மட்டுமல்ல இதன் தொழிலாளிகளும் தங்கள் வாழ்வாதாரத்தில் மிகவும் வறுமை கோட்டுக்கு தள்ளப்பட்டதைத் தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதிவண ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையின் வேண்டுகோளுக்கிணங்க மன்னார் ஆயர் இல்லம் பாதிப்புக்குள்ளான படகுகளை உடன் புனரமைப்பதற்கான பண உதவிகளை வழங்கியுள்ளது.
பேசாலை மீனவ சங்க சிபாரிசுடன் ஒவ்வொரு படகின் பாதிப்புக்கேற்றவாறு அவற்றிற்கான பணத்தை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சோசை அடிகளார் பேசாலைக்கு வருகை தந்து பேசாலை பங்குத் தந்தை அருட்பணி அலெக்ஸ்சாண்டர் பெனோ சில்வா அடிகளார் ஊடாக கடந்த வெள்ளிக் கிழமை (20.05.2016) நேரடியாக மீனவர்களுக்கு பணத்தை பகிர்ந்தளித்துள்ளார்.
பன்னிரண்டு இலட்சத்து தொண்ணூறு ஆயிரம் ரூபா பணம் பகிர்ந்தளிக்கப்பட்டபோதும் சிலர் குரு முதல்வரிடம் பெற்ற பணத்தைக் கொண்டு படகுகளை திருத்தியபின் இதில் மிஞ்சிய பணத்தை பங்கு தந்தையிடம் வழங்கி தங்கள் நம்பிக்கை தன்மையை வெளிப்படுத்தியிருப்பதாக பங்கு தந்தை அருட்பணி அலெக்ஸ்சாண்டர் பெனோ சில்வா தெரிவித்தார்.
ஆயர் இல்லத்தால் வழங்கப்பட்ட பணத்தில் மிகுதி பணம் காணப்படுமாகில் இழுவைப்படகு பாதிப்பால் தொழில் இன்றி தவிக்கும் மீனவ குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கவும் ஆலோசனை பெறப்பட்டு வருவதாகவும் பங்கு தந்தை தெரிவித்தார்.
இத்துடன் இக்காலகட்டத்தில் இப்பகுதியில் கடலில் உயிர்நீத்த மீனவர் ஒருவரின் குடும்பத்துக்கும் மன்னார் ஆயர் இல்லம் பண உதவி வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment