May 23, 2016

மேலும் 2.5 இலட்சம் டொலர்களை வழங்குகிறது அமெரிக்கா!

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா
மேலும் இரண்டரை இலட்சம் டொலர்களை (38 மில்லியன் ரூபா) வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்காக 50 ஆயிரம் டொலர்களையும், பாதிக்கப்பட்ட மக்களின் நீண்டகாலத் தேவைகளை நிறைவேற்ற மூன்றாண்டுத் திட்டத்தின் கீழ் 10 இலட்சம் டொலர்களையும் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

இந்த நிலையில், நேற்று மேலதிகமாக, இரண்டரை இலட்சம் டொலர்களை வழங்குவதாக அமெரிக்கத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான அமெரிக்காவின் உதவித் தொகை 1.3 மில்லியன் டொலர்களாக (187 மில்லியன் ரூபா) அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment