October 1, 2015

முல்லைத்தீவில் கோர விபத்து!! 18ற்கும் மேற்பட்டடோர் படுகாயம்!(படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு மல்லாவியில்  இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சியில் இருந்து மல்லாவி நோக்கி ஆடைத்தொழிற்சாலை பெண்களை ஏற்றிசசென்ற
பேரூந்தும்மல்லாவியில் இருந்து நட்டாங்கண்டல் நோக்கி சென்ற பேரூந்துமே நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதில் பயணித்த சுமார் 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வேகக்கட்டுப்பாட்டை இழந்த பேரூந்துகளே இவ்வாறு மோதியுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் நோயாளர்
காவு வண்டியின் ஊடாக மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் படுகாயமடைந்தவர்கள்கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்குறிப்பிட்டுள்ளார்.




No comments:

Post a Comment