October 2, 2015

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் யானையின் அட்டகாசம்: ஒருவர் பலி(படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட திக்கோடை பகுதியில் நேற்று
வியாழக்கிழமை இரவு காட்டு யானையின் தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று வியாழக்கிழமை இரவு 8.30மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் திக்கோடையை சேர்ந்த மூத்ததம்பி சின்னத்தம்பி (68வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவரின் வீட்டினை யானை தாக்கியபோது வீட்டில் இருந்து ஓடியவர் வேலி கம்பியில் சிக்குண்டபோது யானை தாக்கியுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்சடலம் கடுமையாக சிதைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இந்த யானை தாக்குதல்கள் காரணமாக பிரதேசத்தில் இரண்டு வீடுகளும் சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இதேநேரம் கடந்த ஒரு மாத காலப் பகுதியில் திக்கோடை பகுதியில் யானையின் தாக்குதல்கள் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளடன் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரே இந்த யானைகளின் தாக்குதல்கள் இடம்பெற்றுவவதாகவும் இவற்றினை கட்டுப்படுத்த அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது கவலைக்குரியது எனவும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.




No comments:

Post a Comment