கிளிநொச்சி கண்டாவளையில் வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கண்டாவளை பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்திய கலாச்சாரவிழா இன்று கண்டாவளை தட்டுவன்கொட்டி பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், சிறப்பு விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன், கௌரவ விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவன் ஆகியோர் கலந்துகொண்டதுடன்,
கண்டாவளை பிரதேசத்தில் கலை இலக்கிய பொதுப்பணிப் பணிகளில் சேவையாற்றியவர்களுக்கு கலை ஒளி விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
அத்துடன், கண்டாவளையின் மகிமை கூறும் வளை ஓசை நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மங்கள இசையை தருமபுரம் மணியம்குழுவினர் வழங்கினர்.
தமிழ்த்தாய் வாழ்த்தையும் வரவேற்பு நடனத்தையும் தட்டுவன்கொட்டி கண்ணகி அம்மன் வித்தியாலய மாணவர்கள் வழங்கினர்.
அத்துடன் கண்டாவளை முத்தமிழ் கலா மன்றம் வழங்கிய கண்டவளை வரலாறு வில்லிசை கட்டைக்காடு கலை ஒளி கலா மன்ற கலைக்குழுவினர் வழங்கிய நடன ஆற்றுகை, தட்டுவன் கொட்டி கா.நிதர்சனாவின் கவிதை, குமாரசாமிபுரம் உதயசந்திரன் கலைக்குழுவினர் வழங்கிய கரகாட்டம்,
கோரக்கன்கட்டு புத்தொளி கலை கலை இலக்கிய மன்றம் வழங்கிய நகைச்சுவை நாடக,ம் தட்டுவன்கொட்டி அம்பாள் கலா மன்றம் வழங்கிய கோவலன் கண்ணகி இசை நாடகம் மற்றும் பட்டி மன்றம் என்பன இடம்பெற்றன.
No comments:
Post a Comment