April 20, 2015

ஜே.வி.பி கட்சிக்குள் அண்மையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு மகிந்த!

ஜே.வி.பி கட்சிக்குள் அண்மையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு மகிந்த ராஜபக்சதான் காரணமென கட்சி முக்கியஸ்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மகிந்தவிற்கு ஆதரவான அணியை அவர் வெளியேற தூண்டியதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஜே.வி.பியிலிருந்து வெளியேறும் சேமவன்ச அமரசிங்க மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான போக்கினை கொண்டிருந்தார். மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஜே.வி.பி பெட்டிப்பாம்பாக அடங்கியிருந்ததாகவும், இதனாலேயே மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்ததாகவும் அவர்கள் குற்றம்சுமத்துகின்றனர்.
எனினும், புதிய தலைவர் அநுரகுமார திசாநாயக்கவோ மகிந்த என்றாலே கடும் எரிச்சலடையும் ஒருவராக உள்ளார்.
மகிந்தவிற்கு எதிரான வியூகங்களிற்காக தற்போதைய அரசின் வலதுசாரிப் போக்கினை அனுசரித்து செல்வதென அவர் முடிவு செய்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கட்சி தன கொள்கைகளை விட்டு விலகிவிட்டதாக குற்றம்சாட்டி தனது அபிமானிகளை வெளியேற மகிந்த தூண்டியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

No comments:

Post a Comment