முல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கு யானைத் தந்தங்களை சட்டவிரோதமான முறையில் கடத்திச் சென்ற நான்கு பேரை கைது செய்துள்ளதாக புல்மோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவிலிருந்து இரண்டு யானைத்தந்தங்களை அனுமதிப் பத்திரங்கள் எவையும் இன்றி வான் ஒன்றில் திருகோணமலைக்கு கொண்டு சென்ற போது தென்னைமரவாடி சந்தியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்ப்படுத்தினர்.
எனினும் இவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வான் புல்மோட்டைப் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment