சம்பூரில் மீளக்குடியமர்ந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நடை பயணம் கனேடிய நேரம் இன்று காலை ஆரம்பமாகியது
.. இந்த நடை பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் பங்குபற்றியுள்ளார்.
கனடியத் தமிழர் பேரவையோடு திருகோணமலை நலன்புரிச் சங்கம் – கனடா இணைந்து இந்த நிதிசேர் நடை பயணத்தை முன்னெடுத்துள்ளன.
10 ஆண்டு காலத் துயர்மிக்க ஏதிலி வாழ்வின் பின் 253 குடும்பங்கள் சம்பூரில் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 41 குடும்பங்களுக்கு வீடு கழிவறை மற்றும் கிணறுகளை அமைத்து உதவ நூறாயிரம் டொலர்களைச் சேகரிப்பதே நிதி சேர் நடை பயணத்தின் இலக்காகும்.

இந்த 41 குடும்பங்களும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் என்பதும் அதிகமான குடும்பங்கள் போரினாற் குடும்பத் தலைவர்களை இழந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நடை பயணம் இசுகாபரோ தொம்சன் நினைவுப் பூங்காவிலிருந்து ஆரம்பமானது.
No comments:
Post a Comment