நீதிக்கான தேடல் திரைப்படம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்தத் தயாராக இருப்பதாக அதன் தயாரிப்பாளர் கெலம் மக்ரே அறிவித்துள்ளார்.
இதுகுறித்த செய்தியொன்றை பீ.பீ.சி. சிங்கள சேவை வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் இருந்து மேலும் தெரியவருவதாவது,
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் நோக்கில் நீதிக்கான தேடல் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் வழமை போன்று இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் ஆதாரங்கள் இல்லை என்ற வழமையான மறுப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஆவணப்படத்திற்கு அடிப்படையாக அமைந்த ஆதாரங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடத் தயாராக இருப்பதாக அதன் தயாரிப்பாளர் கெலம் மக்ரே அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கெலம் மக்ரே, தான் எதிர்வரும் 16ம்திகதி தொடக்கம் ஜெனீவாவில் இருக்கவுள்ளதாகவும், தனது கொலைக்களம், நோபயர் சோன் மற்றும் நீதிக்கான தேடல் ஆவணப்படங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விரும்பினால் ஜெனீவாவில் அரச பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment