நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை கட்சியாக பதிவு செய்வதற்கு அதன் உறுப்பு கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
இந்தக் கட்சிகள் கடந்த வியாழக் கிழமையன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பில் கூடி கலந்துரையாடின.
இதன்போது கட்சியை பதிவு செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டமைப்பையும் பதிவு செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment