வடக்கில் பிரபாகரனின் சிலை அமைக்கப்பட வேண்டுமென்ற விஜயகலா மகேஸ்வரனின் கனவு இன்று நனவாகிக் கொண்டிருக்கின்றதாம். வடக்கிலி
ருந்து இன்று சிங்களவர்கள் வெளியேற்றப்படுகின்றனர் எனத் தெரிவித்த பியகம சுசில தேரர், தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டியெழுப்ப வேண்டாம் என நான் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
பிட்டகொட்டே பாகொட வீதியில் தூய்மையான ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் ஆலோசகர் பியகம சுசில தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
தேரர் இங்கு மேலும் உரையாற்றுகையில், வடக்கிலுள்ள ஹசாக காமினி என்ற நாட்டுக்காக உயிர் நீத்த சிங்கள இளைஞனின் சிலை உடைக்கப்பட வேண்டும். இராணுவ நினைவுச் சின்னங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என நல்லாட்சிக்காக குரல் கொடுத்த பௌத்த குரு மார் மற்றும் சிவில் அமைப்பினர் இன்று வடக்கில் பிரபாகரனின் சிலை நிறுவவேண்டும் என்ற கனவை நனவாக்குவதற்காக அங்கிருந்து சிங்களவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்கின்றனர்.
நாக விகாரைக்கு போகும் சிங்களவர்கள் தாக்கப்படுகின்றனர். இது தொடர்பில் நல்லாட்சிக்கு குரல் கொடுத்தவர்கள் சொல்லும் பதில் என்ன? இதுவா நல்லாட்சி? ஜனவரி 8ஆம் திகதி வெளிநாட்டு சதிகாரர்கள் மஹிந்த ராஜபக் ஷவின் வெற்றியை தடுத்தார்கள் இன்று மஹிந்தவின் வெற்றியை ஜனாதிபதி மைத்திரிபால தடுத்துள்ளார்.
வடக்கிலிருந்து சிங்களவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். ஆனால் அதனை வெளியில் தெரியாமல் அரசு மூடி மறைக்கின்றது. நாய்க்கு கல்லடித்தால் அது குரைக்கும் சிங்கத்திற்கு கல்லடித்தால் அது சீறும் எனவே தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டி யெழுப்ப வேண்டாம் எழுப்பினால் விளைவுகள் விபரீதமாகும். இந்த ஆட்சியை முன்னெடுக்க இடமளிக்க மாட்டோம் என்றும் தேரர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment