திருகோணமலையில் காணாமல்போன மீனவர் பற்றிய விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரி, சல்லி பிரதேச மக்கள் மேற்கொண்ட சாலை மறியல் போராட்டத்தில் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள், திருகோணமலை- புல்மோட்டை வீதியில், சாம்பல் தீவு பாலத்தின் மேல் காலை 6.00 மணிக்கு மறித்து வீதியில் அமர்ந்ததுடன், புல்மோட்டை வீதியை 6வது மைல் கல் சந்தியிலும் முற்றுகையிட்டனர்.
இதனால் திருகோணமலைக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.
பாடசாலை மாணவர்களும் பரீட்சைக்குச் செல்லும் பரீட்சார்த்திகளும் நோயாளர்களும் பொலிஸாரின் வண்டியில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment