August 26, 2015

இலங்கை - அவுஸ்திரேலியாவுக்கு இடையில் நேரடி விமான சேவை!

இலங்கைக்கும், அவுஸ்திரேலியாவுக்கு இடையில் நேரடி விமான சேவை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதற்கமை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதியில் இருந்து வாரத்திற்கு ஒரு முறை அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையில் நேரடி விமான பயணங்களை ஆரம்பிப்பதாக சிவில் விமான போக்குவரத்து ஆணைய பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சீ.நிமல்சிறி தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனேஷியாவின் பாலி தீவில் இடம்பெற்ற சிவில் விமான போக்குவரத்து சேவை இருதரப்பு கலந்துரையாடலின் முடிவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை 08 வருடங்களுக்கு பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment