கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் மோட்டார்சைக்கிளை, பின்னால் வந்த பாரவூர்தி மோதியதில் ஒருவர் படுகாயமடைந்தார். விபத்தில் பாரவூர்தி
தீப்பற்றியது. ஒருமணி நேர போராட்டத்துக்குப்பின்னரே தீ அணைக்கப்பட்டது.
இந்த விபத்து இன்று பிற்பகல் 5.10 மணியளவில் நடைபெற்றது.
விபத்தில் வட்டக்கச்சியைச் சேர்ந்த ஐயாத்தம்பி தர்மராசா (வயது -54) என்பவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு பொருட்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி, மோட்டார்சைக்கிளை மோதி 50 மீற்றர் வரை இழுத்துச் சென்றதால் உராய்வு காரணமாக பாரவூர்தி தீப்பற்றிக்கொண்டது.
இந்த தீயை அணைக்க முடியாதநிலை ஏற்பட்டதால் பாரவூர்தியின் பெரும்பகுதி தீயில் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


No comments:
Post a Comment