August 24, 2015

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்றாம் கட்ட சாட்சி பதிவுகள்!( படங்கள் இணைப்பு)

காணாமல்போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாவது அமர்வில், மூன்றாம் நாள் விசாரணைகள் வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெற்ற விசாரணையின்போது ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்ட காணாமல்போனவர்களின் உறவினர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வருகைதந்திருந்ததுடன் அவர்களுடைய வாய்மூல விசாரணைகளை பதிவு செய்தனர்.
இன்று காலை ஒன்பது மணி தொடக்கம் இந்த அமர்வு நடைபெற்றுவருவதுடன், ஆணைக்குழு முன்பாக காணாமல்போனவர்களின் உறவினர்கள் சாட்சியங்களை அளித்து வருகின்றனர்.
வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட பகுதிகளில் இருந்து முஸ்லிம்களும் கணிசமான அளவு தங்களின் உறவுகளை கண்டறிவதற்கான விசாரணைகளை அளித்தனர்.
ஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையில் முன்னதாக இயங்கிவரும் இந்தக் குழுவில் நீதியமைச்சின் சட்ட வரைஞர் திணைக்கள முன்னாள் பிரதி சட்ட வரைஞரும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆணையாளருமான மனோகரி ராமநாதன்,  
குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ரீ.வி. பிரியந்தி சுரஞ்சனா வித்யாரத்ன ஆகியோரடங்கிய குழுவினர் காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்று மாலை 5.00மணி வரையில் இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment