August 6, 2015

கூட்டமைப்பிலுள்ள ஆயுதக்குழுக்களே மோதலிற்கு காரணம்! -சுமந்திரன்!

மிழ் தேசியக்கூட்டமைப்பில் பங்காளிகளாக உள்ள கட்சிகளில் சில முன்னாள் ஆயுதம் தாங்கி போராடிய அமைப்பினை சேர்ந்தவை. முன்னைய காலங்களில் அவை சகோதரப்படுகொலைகளில் ஈடுபட்டவை. அதன்
தொடர்ச்சியே கூட்டமைப்பினுள் அண்மை நாட்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களென தெரிவித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று பத்திரிகையாளர் மாநாடொன்றை அவர் நடத்தியுள்ளார். கிளிநொச்சியில் சிறீதரனின் ஆட்கள் சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் சரவணபவனின் ஆட்களை தாக்கியுள்ளனர். அதே போல உடுப்பிட்டியில் தங்கள் ஆதரவாளரொருவர் தாக்கப்பட்டுள்ளார். இவை தொடர்புடைய தரப்புக்களினால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதேயென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இது பற்றி பிரஸ்தாபிக்கையில் சகோதர கொலைகள் முடிந்த விடயம். தற்போதைய சம்பவங்களின் பின்னணியில் இத்தகைய தரப்புக்களே உள்ளன. அதனை நினைத்தே ஈபிஆர்எல்எவ் அடித்தது வலித்ததென சிறீதரன் தெரிவித்திருந்தார். ஆனால் இத்தகைய கருத்துக்கள் தவிர்த்துக்கொண்டிருக்க கூடியவையென தெரிவித்தார்.
கூட்டமைப்பு தமிழ் மக்களது ஒற்றுமை பற்றி பேசும் நீங்கள் விருப்பு வாக்குகளிற்காக தானே இவ்வாறு மோதுப்பட்டு வன்முறைகளில் ஈடுபடுகின்றீர்களென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் இனத்தின் பொது நன்மை குறித்து தேர்தல் முறைமைகள் தொடர்பிலான அரசியலமைப்பு மாற்றத்தில் விருப்பு வாக்கு நடைமுறையினை நீக்குவது தொடர்பில் பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment