தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பின்னர் சுமந்திரனோடு இணைந்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருந்த சிறீதரன் தனது தனித்த
ஓட்டத்தைஆரம்பித்துள்ளதாக சுமந்திரனது ஆதவாளர்கள் குற்றச்சாட்டுக்களினை முன்வைக்க தொடங்கியுள்ளனர். தினம் இவ்விவகாரம் வடமராட்சி பகுதிகளினில் சூடுபிடிக்கின்ற விவகாரமாக இருந்திருந்தது.
தபால் மூல வாக்களிப்பு நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையினில் சிறீதரன் தனிப்பட்டதாக தனது செயற்பாட்டாளர்களிடம் சுமந்திரனை வாக்களிப்பின் போது புறக்கணிக்க அறிவுறுத்தியுள்ளார்.இதனையடுத்தே இருவரிற்குமிடையேயான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனக்கான விருப்பு வாக்கு தொடர்பினில் கூடிய ஆர்வம் கொண்டுள்ள சிறீதரன் கிளிநொச்சியினில் தனது கட்சி சார்ந்த ஏனைய தரப்பு வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யக்கூடாதென தடுத்து வருகின்றார்.தனது ஆதவாளர்களினை கொண்டு தாக்குதல்களையும் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment