August 22, 2015

விளம்பரங்கள் எதுவுமின்றி ஒரு லட்சம் விருப்பு வாக்குகள்!

விளம்பரங்கள் எதுவும் இன்றி ஒரு லட்சத்துக்கும் அதிக விருப்பு வாக்குப் பெற்று பாராளுமன்றம் சென்ற ஒருவரை ஊடகங்கள் அறிமுகம் செய்துள்ளன.

ஊடகங்களில் விளம்பரங்கள் செய்யாமல், டீ -சேர்ட், தொப்பி என்பன விநியோகிக்காமல், போஸ்டர், கட்அவுட் எதுவும் அடிக்காமல், கட்சிக் காரியாலயம் திறக்காமல் இவர் வெற்றி  பெற்றுள்ளார்.
இவர் இப்பாராளுமன்றத் தேர்தலில் 105406 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பிரபல அபேட்சகர் ஒருவருக்கு போஸ்டர் அடிப்பதற்கு செய்யப்பட்ட மாவுக்கான செலவு கூட தனக்கு ஏற்பட வில்லையென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.  

No comments:

Post a Comment